‘அக்பர்கான் கொலை’ -ராஜஸ்தான் முதல்வர் சொன்னது என்ன?

இடுக்கி அணை நிரம்புகிறது:உஷார் நிலை!

கருணாநிதியை இழிவு படுத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ராம் விலாஸ்பாஸ்வான்?

சிறப்பு மருத்துவர்கள் கோபாலபுரம் வருகை 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி!

இயற்கை வாழ்வுக்கும் மரபுக்கும் இடையில் வதைபடும் நவீன மருத்துவம்!

மரபை மீட்போம் என்பதும் மூட நம்பிக்கைதான்!

பசு பாதுகாப்பு என்னும் பெயரில் இந்தியா முழுக்க தலித்துக்கள், முஸ்லீம்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் இக்கொலைகள் நிறுத்தப்படவில்லை. தலித் மக்கள் மீதான கொலைகளுக்கு அரசியல் ரீதியாக தலித் மக்கள் எதிர்வினையாற்றும் நிலையில் முஸ்லீம்களின் நிலை கவலைக்குறியதாக இருக்கிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தில் பசுக்களை அழைத்துச் சென்ற அக்பர் கான் என்ற விவசாயி பசு பாதுகாவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மோடி அரசும் , ராஜஸ்தான் மாநில பாஜக அரசும் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இது தொடர்பாக பேசிய ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேசிந்தியா:-
“இது போன்ற தாக்குதல்கள் ராஜஸ்தானில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுக்க நடக்கிறது. நான் எதுவும் பேசவில்லை, செயல்படவில்லை என்று குற்றம் சுமத்துகிறவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இது மிகவும் மோசமானது.ராஸ்தானில் உள்ள எங்கேயோ ஒரு கிராமத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கடவுளாக மட்டுமே இருக்க வேண்டும். வேலைவாய்ப்பின்மையே இது போன்ற தாக்குதலுக்கு காரணம்” என்றும் கூறியுள்ளார்.

#கும்பல்தாக்குதல் #குழு_தாக்குதல் #பசுபாதுகாப்பு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*