அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது?

டெல்லியில் ஓ பி எஸ்: பின்னணி!

அரசு காப்பகத்தில் பாலியல் கொடுமை:சிறுமி கொன்று புதைப்பு!

தன் ஆதரவாளர்களுடன் செல்லி சென்ற தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை பாஜக தலைவர்கள் சந்திக்காததோடு, இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் சந்திக்காமல் அவரை திருப்பி அனுப்பியது தமிழக அரசியலில் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
அமித்ஷாவை சந்திக்கும் நோக்கோடு பன்னீர்செல்வம் டெல்லி சென்றதாகவும், பின்னர் நிர்மலா சீத்தாராமனை சந்திக்க நேரம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பன்னீர்செல்வத்தின் அணியில் இருக்கும் அதிமுக எம்.பி மைத்ரேயனை சந்தித்த நிர்மலா சீத்தாராமன் பன்னீரை சந்திக்கவில்லை. இது பலத்த சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பன்னீர்செல்வம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் இது பற்றி கேட்ட போது “எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா கூறியுள்ளார்” என்று மட்டும் சொல்லிச் சென்றார் பன்னீர். அறிஞர் அண்ணா பரந்த திராவிட இயக்க பொருளில் அந்த வார்த்தையை பயன்படுத்தினார். ஆனால் பன்னீர்செல்வம் அதிமுகவுக்குள் நடக்கும் கோஷ்டி மோதல், பாஜகவோடு நெருக்கத்தில் ஏற்பட்ட சுணக்கம் என்கிற பொருளில் அண்ணாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்.
#
ஏன் டெல்லி சென்றார் பன்னீர்? என்ன நடக்கிறது அதிமுகவுக்குள் என்ற கேள்விக்கு சில கேள்விகளை முன்வைத்தாலெ தெரிந்து விடும். ஒபிஎஸ்- இபிஎஸ் இருவரையும் இணைத்து வைத்ததே பாஜகதான். ஆனால் ஒபிஎஸ் அணியினருக்கு கட்சியிலும் ஆட்சியிலும் உரிய முக்கியத்தும் இல்லை என்பதால் இது தொடர்பான பஞ்சாயத்துகளுக்கு பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருக்கலாம்.
#
சில காலம் பொறுத்திருக்கவும் உங்களை முதல்வராக்குகிறோம் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றக் கோரி டெல்லி சென்றிருக்கலாம்.
#
இதை எல்லாம் விட மிக முக்கியமாக பேசப்படுவது. எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருமே ஏதோ ஒருவகையில் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். ஆனால் தினகரனை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. கைதுகள், மிரட்டல்களுக்கு அவர் அஞ்சவில்லை. ஆனால் அதிமுகவில் இன்று இருக்கும் தலைவர்களில் சசிகலாவுக்கும் , தினகரனுக்கும்தான் அதிக செல்வாக்கு இருக்கிறது அதனால் அவர்களை அதிமுகவுக்குள் கொண்டு வந்து அனைவரையும் ஒன்று படுத்தி தேர்தலை சந்திப்பதுதான் நல்ல திட்டம் என்பதால். தினகரனை பாஜக சமாதானப்படுத்தி விட்டது. ஆதனால்தான் அவர் மத்திய அரசு பற்றியோ மோடி பற்றியோ இப்போதெல்லாம் வாய்திறப்பதில்லை.
நேரடியாக அதிமுகவுக்குள் இப்போது இணைவது சாத்தியமில்லை என்பதால் தன் நம்பிக்கைக்குறிய விசுவாசி ஒருவர் மூலம் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை விட தினகரனும், சசிகலாவும் அதிகம் வெறுப்பது எடப்பாடி பழனிசாமியைத்தான். பன்னீர்செல்வத்தின் துரோகத்தை விட வஞ்சகமானவர் எடப்பாடி பழனிசாமி என்று சசிகலா எண்ணுவதால். இவர்களை அதிமுகவில் இருந்து விரட்ட தினகரனும் இந்த பிளானுக்கு சம்மதித்திருக்கிறார்.
#
சமீபத்தில் நடந்த ரெய்டுகளில் செய்யாதுரை வீட்டில் கைப்பற்றப் பட்ட பணத்தில் கணிசமானவை பன்னீர்செல்வத்திற்கும் சொந்தமானது என்னும் நிலையில் விசாரணையில் அவர் பல தகவல்களை கசிய விட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், டெல்லி சென்றார்.
#
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மீதான அதிருப்தி வாக்குகளை சிதறிடித்து திமுகவை வெல்ல விடாமல் தடுப்பது ஒன்றே இப்போது அதிமுகவுக்குள் நடந்து வரும் குழப்பங்கள். அதிமுகவில் பல அணிகளாக சிதறும் வாக்குகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை வென்றால் மட்டுமே பாஜக அடுத்த முறை ஆட்சியமைக்க முடியும் என நம்புகிறார்கள். வடக்கிலிருந்து கிடைத்த வெற்றியை மாற்றி இனி தெற்கிலிருந்து அடுத்த கணக்கை துவங்க வேண்டும் என நினைக்கிறது.

கோமாதாவுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லையே: சிவசேனா கவலை!

ரஜினி, கமல், சாதிக்காமாட்டார்கள் என்பது அதிர்ச்சி செய்தியா புதிய தகவலா?

“பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இந்தியா” -ஸ்குவாஷ் போட்டிக்கு வர மறுத்த வெளிநாட்டு வீராங்கனை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*