அமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி!

ராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் தாக்குதலுக்கு தயார்?

மோடிக்கு ராகுல் செய்த கட்டிப்புடி வைத்தியம்!

தேர்தல்களில் தோற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப் போகும் பாஜக!

பூச்சட்டி சுமந்த சித்தாராம்யெச்சூரி பிரச்சாரமும் பின்னணியும்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மறைமுகமாக பாஜகவை ஆதரித்து வந்த ஒபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுக பாஜகவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலம் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்திருக்கிறது. இது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதங்கள் முடிந்து நேற்று இரவு 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பு தொடர்பாக அதிமுக தரப்பில் முன் கூட்டியே தெலுங்கு தேசத்தின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம் என அறிவித்து விட்டனர். அதிமுக எம்.பி மைத்ரேயனும் இதையே சொன்னார்.  அதிமுக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் சிவசேனா போல  அவையை புறக்கணிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையிலேயே அமர்ந்திருந்தனர்.
தெலுங்குதேசத்தின் தீர்மானத்திற்கு ஆதரவாக வெறும் 126 பேர் மட்டுமே வாக்களித்த நிலையில் தீர்மானத்திற்கு எதிராக 325 பேர் வாக்களித்து பாஜகவை பிரமாண்டமாக வெற்றி பெற வைத்துள்ளார்கள். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்று அதிமுகவை தொடர்பு கொண்ட பாஜக தலைமை வாக்களிக்கும் படி உத்தரவிட்டது.
முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி உள்ளிட்டோர்  அலுவலகங்களில் ரெய்ட் நடந்தது. இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆதரவாக வாக்களிப்பது அல்ல, அவையை விட்டு வெளியில் செல்லாமல் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பாஜக நேரடியாகவே உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
325 உறுப்பினர்கள் ஆதரவோடு பாஜக வெல்ல அதிமுகவின் வாக்குகளும் ஒரு முக்கிய காரணம்.  பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே இதில் முடிவெடுக்க திணறும் போது, அதிமுக மிக துணிச்சலாக பாஜகவை ஆதரித்து வாக்களித்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மறைமுகமாக பாஜகவை ஆதரித்த அதிமுக இப்போது முதன் முறையாக பாஜகவை வெளிப்படையாக ஆதரித்துள்ளது.இதன் மூலம் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. கட்சி தலைமை கூடி முடிவெடுக்காமல் யாரையும் கேட்காமல் அமித்ஷா உத்தரவுக்கு ஆடும் நிலைக்கு அதிமுக வந்துள்ளது கண்டு அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உரைந்திருக்கிறார்கள்.அதிமுக ஒபிஎஸ்-இபிஎஸ் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா அல்லது அமித்ஷாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதா என்ற குழப்பம் அதிமுகவுக்குள் எழுந்துள்ளது.
கூவத்தூரில் வைத்து சசிகலா கொடுத்த சாவியை பாஜகவிடம் ஒப்படைத்த போது இபிஎஸ் இப்படி ஒரு பொறிக்குள் தான் சிக்கப் போகிறோம் என்பதை தெரிந்திருக்கவில்லை. தானும் ஒரு ராஜாவாக தமிழகத்தில் இருக்கப் போகிறோம் என்றுதான் நினைத்தான். ஆனால் இன்று நிலமை வேறு டெல்லி எம்.பிக்கள் இபிஎஸ் கட்டுப்பாட்டில் இல்லை. பாஜகவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை என்றுதான் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்க முடிந்தது. ஆனால், அதிமுக எம்.பிக்களுக்கு “அவையை விட்டு வெளியேறக் கூடாது.அவைக்குள் இருந்து பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என்று அமித்ஷா உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாஜகவின் பொறிக்குள் இருந்து இபிஎஸ் வெளியேற நினைத்தாலும் அது அத்தனை எளிதல்ல காரணம் மொத்த குடும்பத்தினரும், இபிஎஸ் நண்பர்களும் வருமானவரித்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறார்கள். அதிமுகவை அப்படியே பாஜக எடுத்துக் கொள்ளாது அது சாத்தியமும் இல்லை. ஒபிஎஸ்-இபிஎஸ் என்ற இரு முகங்களும் இனி பாஜகவின் தாளங்களுக்கு மட்டுமே ஆட வேண்டும். ஆட முடியும்.
#பாஜக_கூட்டணியில்_அமித்ஷா #நம்பிக்கைவாக்கெடுப்பு #அமித்ஷாவின்_கட்டுப்பாட்டில்_அதிமுக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*