அருள் எழிலன் பற்றி கார்டூனிஸ்ட் பாலா!

என் நினைவுகளில் என்றும் மறக்க முடியாத.. மறக்க கூடாத நண்பர்களின் பட்டியல் பெரிது.

அதில் அண்ணன் அருள் எழிலனும் ஒருவர்.

இப்போதும் அந்த காட்சி நினைவில் இருக்கிறது..

காவல்துறையினர் என்னை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றபோது.. என் மனைவி பால்கனிக்கு ஓடிச்சென்று “அண்ணே.. அண்ணே..” என்று கதறிய சத்தம் கேட்டு எதிர் வீட்டிலிருந்து பாய்ந்து ஓடி வந்து குறுக்கே புகுந்து தடுத்தார்.

அண்ணனுக்கு அஜானுபாகுவான உடல் இல்லை என்றாலும் குறுக்கே புகுந்து மல்லுக்கட்டிய அந்த அன்பும் தைரியமும் மறக்க முடியாதது.

அதன் பிறகு அவர் மூலம் தான் என்னை போலீசார் இழுத்து செல்வது வெளி உலகுக்கு நண்பர்களுக்கு தெரிய வந்தது.

பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல் சீக்ரெட்டாக என்னை தூக்க விரும்பிய 7 பேர் கொண்ட பழனிசாமியின் தனிப்படை போலீஸ் எதிர்பார்க்காத டுவிஸ்ட் அது.

உடனடியாக நண்பர்கள் ராஜகுள்ளப்பன், அழகிரி மற்றும் வழக்கறிஞர் வாஞ்சி நாதனையும் அழைத்துக்கொண்டு நெல்லைக்கு காரில் எங்களை பின் தொடர்ந்து வந்துவிட்டார். பின்னர் அதே காரில் என்னை மீண்டும் சென்னைக்கும் அழைத்து வந்து வீட்டில் விட்ட பாசக்காரர்.

நினைவில் நிற்கும் விகடன் நிருபர்களின் பெயர் பட்டியலில் அருள் எழிலன் முக்கியமானவர்.

ராஜீவ் படுகொலைக்குப்பின்பு அச்சம் காரணமாக ஊடகங்களில் ஈழம் சார்ந்த விசயங்கள் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்த காலத்தில் விகடனில் அதிகமாக ஈழம் குறித்து எழுதியவர்.

மனித உணர்வுகளை தட்டி எழுப்பும் கட்டுரைகளில் அருள் எழிலனை அடித்துக்கொள்ள முடியாது. அவரது எழுத்து நடைக்கு இருக்கும் எண்ணற்ற ரசிகர் பட்டாளங்களில் நானும் ஒருவன்.

அவரது ஊடக பயணத்தில் முக்கியமான பதிவு ஒன்றை நாளை வெளியிடுகிறார்.

ஒக்கி புயலில் திட்டமிட்டு இந்திய அரசால் கைவிடப்பட்டு கொல்லப்பட்ட 194 தமிழக மீனவர்களின் படுகொலை குறித்து அவர் இயக்கிய `பெருங்கடல் வேட்டத்து’ என்ற ஆவணப்படம் நாளை மாலை 4 மணிக்கு ரஷ்ய கலாச்சாரா மையத்தில் திரையிடப்படுகிறது.

அனுமதி இலவசம்.. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். நன்றி.

-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா

fisherman_documentary,ockhi_cyclone_documentary,
ockhi_documentary cyclone_documenrary, ஓக்கிபுயல்_ஆவணப்படம்,ஓகிஆவணப்படம்,அருள்_எழிலன், arulezhilan_documentary,kanyakumari_fisherman,குமரி_மீனவர்கள், பெருங்கடல்வேட்டத்து,perungadal_vettaththu,tamilnadu_documentary

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*