ஆழ்வார் பேட்டை ஆண்டவா கமல் பதில்!

தங்க மங்கை ஹிமா தாஸ் மீது நிறவெறி உமிழ்ந்த இந்திய தடகள சம்மேளனம்!
தங்க மங்கை ஹிமா தாஸ் மீது நிறவெறி உமிழ்ந்த இந்திய தடகள சம்மேளனம்!
மருத்துவக் கல்வி: டி.கே. ரங்கராஜன் எம்.பி முதல்வருக்கு கடிதம்!

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மைய்யம் என்ற புதிய கட்சியை உருவாக்கியுள்ளார். இந்த கட்சியினர் கமல் வரும் இடங்களில் பல் வேறு கோஷங்களை எழுப்பி வரும் நிலையில் கமல்ஹாசன் வரும் போது எழுப்ப  வேண்டிய கோஷங்கள் என கட்சியினர் சில வாசகங்களை எழுதி தொண்டர்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள். அதில் “ஆள வாங்க ஆள வாங்க ஆழ்வார்பேட்டை ஆண்டவரே” என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் கேலிக்கு உள்ளான நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல் :-

“ சட்டமன்ற, நாடாளுமன்ற  தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தக் கூடாது. தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்துப் போன நிலையில் உள்ளது அதனால் பயனேதும் இல்லை.நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தாவில் பால் இல்லை தண்ணீர் தான் உள்ளது. ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவிலை.மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் அனைவரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல, இன்று சத்துணவு முட்டையில் ஊழல் என்கிறார்கள். இதையே நாங்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே நாங்கள் கூறி வருகிறோம்” என்று பேசிய கமல் ஆழ்வார்பேட்டை ஆண்டவா என்று தன்னை அழைப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*