இடுக்கி அணை நிரம்புகிறது:உஷார் நிலை!

ஆசியாவில் கட்டப்பட்ட வளைவு அரை வட்ட அணைகளில் பெரியது எனக் கருதப்படும் இடுக்கி அணை நிரம்பி வருவதால் வெள்ள அபாயம் ஏற்படும் என முப்படைகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்திற்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இடுக்கி அணை ஆசியாவின் பெரிய அணை என்று கூறப்படுகிறது.1969 -ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டு 1973 -ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. 1981-ஆம் ஆண்டு மற்றும் 1992 -ஆம் ஆண்டு மட்டுமே நிரம்பிய இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்டது. பின்னர் இந்த அணை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யாத நிலையில், இப்போது கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது.இந்த அணையின் நீர்மட்டம் மதியம் ஒரு மணி அளவில் 2,394.72 அடியை எட்டியது. அணை விரைவில் நிரம்பும் அளவுக்கு வந்து விட்டதால் கேரள பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் அணையை பார்வையிட்டு  அணையை திறந்து விடுவது பற்றி ஆலோசனை செய்து வருகிறார்கள்.
அணையை திறந்து விடும் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்தது.  அணை உள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு மற்றும் அதையொட்டி பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகள் குடியிறுப்புகள் பற்றிய அவசர கணக்கெடுப்பு துவங்கி உள்ளது.இன்னும் 75 மணி நேரத்திற்குள் அணை நிரம்பி விடும் என்பதால் பணிகள் முடுக்கி விடப்படுள்ளது.
திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களுக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*