எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்?- தேஜஸ்வி வெளியிட்ட தகவல்!

டெல்லியில் ஓ பி எஸ்: பின்னணி!

அரசு காப்பகத்தில் பாலியல் கொடுமை:சிறுமி கொன்று புதைப்பு!

கோமாதாவுக்கு இருக்கும் பாதுகாப்பு பெண்களுக்கு இல்லையே: சிவசேனா கவலை!

ரஜினி, கமல், சாதிக்காமாட்டார்கள் என்பது அதிர்ச்சி செய்தியா புதிய தகவலா?

“பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இந்தியா” -ஸ்குவாஷ் போட்டிக்கு வர மறுத்த வெளிநாட்டு வீராங்கனை!

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல்மட்டுமே இல்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் இப்போதே முன்னிறுத்த துவங்கி விட்டது. அவரும் முழு நேர அரசியல்வாதியாக மாறி பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்து வருகிறார். சமீபத்திய ராகுல்காந்தியில் செயல்பாடுகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு உலக அளவில் டிரெண்டிங்கும் ஆகி வருகிறது.
ஆனால், மிருக பலத்தோடு இருக்கும் பாஜகவை தனியொரு கட்சியாக காங்கிரஸ் கட்சியால் வீழ்த்த முடியுமா என்ற சந்தேகங்களும், கேள்விகளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே உள்ள நிலையில், இந்தியா முழுக்க பல்வேறு கட்சிகளை காங்கிரஸ் ஒருங்கிணைத்து வருகிறது. அதில் முக்கியாமனவர் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ். காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களில் பங்குபெறும் தேஜஸ்வி இன்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசும் போது:-
“எதிர்க்கட்சிகள் ஒன்று கூடித்தான் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வார்கள். எதிர்க்கட்சிகளின் மற்ற தலைவர்களான திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசிய வாத காங் தலைவர் சரத்யாதவ், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி என பலரும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் உள்ளார்கள். ஆகவே எதிர்க்கட்சிகள் கூடி யாரை பிரதமர் வேட்பாளராக தெரிவு செய்கிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப்போம். அது ராகுல்காந்தியாக இருந்தாலும் எங்களுக்கு பிரச்சனையில்லை. அவரை ஆதரிப்போம்” என்றார்.
தேஜஸ்வியின் கருத்து அரசியல் தளத்தில் முக்கியத்தும் பெறுகிறது. காங்கிரஸ் கட்சி சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேஜஸ்வி கூறியிருக்கிறார். இது அவரது தந்தை லாலு பிரசாத் யாதவின் கருத்தும் கனவுமாகும். பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்வதோடு அடுத்தடுத்து வரவிருக்கும் பல மாநில சட்டமன்ற தேர்தல்களையும் எதிர்கொள்ள பிரமாண்டமான கூட்டணி தேவை என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கருதுகிறது. ஆனால் இப்போதைக்கு மெகா கூட்டணியை உருவாக்கும் வல்லமை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா என்பதே?

#பிரதமர்_வேட்பாளர்_ராகுல்காந்தி #2019_நாடாளுமன்ற_தேர்தல் #இந்திய_தேர்தல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*