“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர்!

கருணாநிதியை இழிவு படுத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ராம் விலாஸ்பாஸ்வான்?

சிறப்பு மருத்துவர்கள் கோபாலபுரம் வருகை 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி!

இயற்கை வாழ்வுக்கும் மரபுக்கும் இடையில் வதைபடும் நவீன மருத்துவம்!

94 வயதில் ஒரு முதியவர் இப்படி இருப்பதே ஆச்சரியமானது. அடிப்படையில் எதிர்ப்புணர்வும் போராடும் உணர்வும் கொண்ட கருணாநிதி தன் இதயத்துடிப்பை பாதுகாத்துக் கொண்டார். மரணம் வரை போராடுதல் என்ற உணர்வு இதுதான். அதை ஆச்சரியமாக மருத்துவ உலகமும் திமுக தலைவர்களும், கலைஞரின் குடும்பமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
கலைஞருக்கு அடிப்படையில் சில பிரச்சனைகள் இருந்தது. அவருக்கு சர்க்கரை நோயோ, ரத்தக் கொதிப்போ இல்லை. ஆனால் சளித்தொற்று இருந்தது. முதுமை காரணமாக ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை முறைக்கு மாற்றப்பட்டார். சமீபத்தில் அந்தக் குழாயை மாற்றியமைக்கும் சிகிச்சையினால் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. கூடவே சிறுநீரகத் தொற்றும் ஏற்பட்டது. வீட்டில் வைத்து சிகிச்சை எடுப்பதா மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிப்பதா என்ற முடிவை ஸ்டாலின் உட்பட கலைஞரின் குடும்பத்தினர் மருத்துவர்களின் கைகளிலேயே விட்டு விட்டனர். முதலில் வீட்டில் வைத்து செய்த சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. எந்த நோய்க்கி சிகிச்சையளிப்பதாக இருந்தாலும் முதலில் ஆண்டிபயோட்டிக் கொடுத்து நோயை கட்டுப்படுத்தி விட்டுத்தான் சிகிச்சையை தொடர்வார்கள்.
ஆனால், கலைஞருக்கு வழங்கப்பட்ட ஆண்டிபயோட்டிக் மருந்துகள் வேலை செய்யாத காரணத்தால் இதயத்துடிப்பு குறைய அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க மருத்துவர்கள் விரும்பி , அதை கலைஞரின் குடும்பமும் ஏற்றுக் கொள்ள அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களில் மூன்று முறை உடல் நிலை மோசமாகி உள்ளது. ஓரளவு இதயத்துடிப்பை சரி செய்து இப்போது அதே நிலை நீடிக்கிறது. என்றாலும் ஆபத்தான கட்டத்தில் இருந்து கலைஞர் இன்னும் மீண்டு விடவில்லை. காரணம் இப்போதும் அவரது சிறுநீரக தொற்றுக்கான சிகிச்சைகளை துவங்க ஆண்டிபயோட்டிக் மருந்துகளை அவர் உடல் ஏற்றுக் கொள்ள மறுப்பதால் அதையும் கவலையோடு மருத்துவர்கள் கவனித்து வருகிறார்கள்.
அவருக்கு வழங்கப்படும் மருந்துகளை கலைஞரின் உடல் ஏற்றுக் கொண்டால் இப்போது உருவாகியிருக்கும் சிக்கல்களில் இருந்து அவர் மீண்டெழுவார். 50 ஆண்டுகாலம் திமுகவின் தலைவராக, ஐந்து முறை தமிழக முதல்வராக, இந்தியாவின் மூத்த தலைவராக, தமிழகத்தின் வரலாற்றை திருத்தி எழுதிய பிதாமகனாக விளங்கும் கலைஞரின் வாயிலிருந்து “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற அந்த ஒற்றை வார்த்தையைக் கேட்க பல்லாயிரம் பேர் இரவு பகலாக காத்திருக்கிறார்கள் அந்த மருத்துவமனைக்கு வெளியே!

#என்_உயிரினும்மேலான_அன்பு_உடன்பிறப்பே #உடன்பிறப்பு #கலைஞர்_மு_கருணாநிதி #திமுகதலைவர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*