கருணாநிதி உடல் நிலை மருத்துவமனை அறிக்கை!

திருடும் நிலையில்தான் பெண் காவலர் உள்ளாரா?

மரபை மீட்போம் என்பதும் மூட நம்பிக்கைதான்!

தம்பிக்கு தனி விமானம்: ஓபிஎஸை சிக்க வைத்த இபிஎஸ்!

1967க்குப் பிறகு தமிழகம் எப்படி மாறியது?-ஜெ.ஜெயரஞ்சன்

ஓகி மீனவர்களைத் தேடுவதில் என்ன நடந்தது?

இந்தியாவின் முதுபெரும் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் காரணமாக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த 2016- டிசம்பர் முதல் உடல் நலம் குன்றிய கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர் வீட்டில் சிகிச்சையுடம் ஓய்வெடுத்து வருகிறார் கருணாநிதி.அவருக்கு டிரக்கியாஸ்டமி சுவாச சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு டிரக்கியாஸ்டமி குழாயை மாற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் வீடு திரும்பிய அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் மருத்துவசதிகள் செய்யப்பட்டு அவரது உடல் நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் இன்று வெளியிட்ட டாக்டர்கள் குழுவின் அறிக்கையில், ”திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல் நலத்தில் வயோதிகம் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.
அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் மருத்துவரகள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழு கவனித்துக்கொள்கிறது.வீட்டிலேயே மருத்துவமனைகள் அடங்கிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வரவேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#கருணாநிதி_உடல்நிலை #காவேரி_மருத்துவமனை #கோபாலபுரம்_இல்லம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*