கலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு!

தியாகு பாணி Vs கலைஞர் பாணி

“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர்!

பிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன?

திமுக தலைவர் கருணாநிதி நான்கு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் எப்படி இருக்கிறார் என்பது தொடர்பாக தமிழக மக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் ரகசியம் எதுவும் இல்லாத வகையில் வெளிப்படை தன்மையோடு நடந்து வருகிறது திமுக.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அது தொடர்பான ஒரு புகைப்படங்கள் கூட வெளியாக வில்லை. அம்மா இட்லி சாப்பிட்டார், பழரசம் அருந்தினார் என்று அவரை பார்க்காதவர்களும் ஊடகங்களுக்கு பொய்ய்யான தகவல்களை வழங்கி வந்தார்கள். அதன் விளைவு அவர் சிகிச்சையில் இருந்த போதே அவரைப் பற்றிய வதந்திகள் பரவின. ஆனால், அப்படி வதந்தி பரப்பியர்கள் கைது செய்யப்பட்டு வழக்குகளும் பாயந்தன. அவர் மரணித்த பிறகு சசிகலாவை பழிவாங்க ஓபிஎஸ்-இபிஎஸ் குழுவினர் ஜெயலலிதா மரணத்தையே ஒரு கருவியாக்கி விசாரணைக் கமிஷனும் அமைத்துள்ளனர்.
மிக முக்கியமாக நான்கு முறை முதல்வராக இருந்த ஒரு பெண்ணின் மரணத்தை கேலிப்பொருளாக்கும் அளவுக்கு அதிமுகவினரின் நடவடிக்கைகள் அமைந்தது. இந்த இடத்திலிருந்துதான் திமுக தலைவர் கருணாநிதியின் சிகிச்சையில் திமுக கடைபிடிக்கும் வெளிப்படைத் தன்மைகளை நாம் காண வேண்டும்.
நான்கு நாட்களாக மருத்துவர்கள் அனுமதித்த அத்தனை பேருமே அவரை நேரடியாக மருத்துவமனைக்குள் சென்று பார்த்தார்கள். இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மருத்துவமனைக்கு வந்த போது அவரை அழைத்துச் சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருணாநிதியின் காதில் ராகுல்காந்தி வந்திருக்கும் தகவலை தெரிவித்தார். சுயநினைவோடு இருந்த கருணாநிதி அதற்கு ரெஸ்பான்ஸ் செய்திருக்கிறார்.
ரத்த அழுத்தம் குறைந்து இதயதுடிப்பு பலவீனமாக இருந்த கருணாநிதிக்கு மருத்துவ சிகிச்சையின் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை இப்போது வெளியிடப்பட்டிருக்கும் படம் எடுத்துக் காட்டுகிறது.

#karunanidhi_under_treatment #சிகிச்சையில்_கருணாநிதி #ராகுல்கருணாநிதி_சந்திப்பு

கருணாநிதியை இழிவு படுத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ராம் விலாஸ்பாஸ்வான்?

சிறப்பு மருத்துவர்கள் கோபாலபுரம் வருகை 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி!

இயற்கை வாழ்வுக்கும் மரபுக்கும் இடையில் வதைபடும் நவீன மருத்துவம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*