சிறுமிகள் பலாத்காரம்;மரண தண்டனை மசோதா நிறைவேற்றம்!

நாடு முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்து வரும் நிலையில், இது தொடர்பான விவாதங்கள் நாடு முழுக்க நடைபெறுகிறது. காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி உட்பட நாடு முழுக்க சிறுமிகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதால் , இம்மாதிரி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும் என்று சட்டமியற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் இந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளௌக்கு மரணதண்டனை விதிக்கும்  வகையிலான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவசர சட்டத்திற்கு மாற்றாக திருத்தப்பட்ட மசோதாவை இன்று உள்துறை இணை அமைசர் கிரண் ரிஜிஜூ இன்று தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேறியது.

#

இந்த மசோதாவின் மூலம் சிறுமிகள் மீதான பாலியல் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிகக் நாடு முழுக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

#

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆயுள் முழுக்க சிறை தண்டனை விதிக்கும் வகையிலும் அதிக பட்சமாக மரணதண்டனை விதிக்கும் வகையில் சட்டம்  திருத்தப்பட்டுள்ளது.

#

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் கிடைக்காது.

#

இது போன்ற வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.

#

மேல் முறையீட்டு மனுவை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்கிறது சட்டம்.

#

முன்னர் சிறுமிகளை பாலியல் வன்முறை செய்கிறவர்களுக்கு 20 ஆண்டுகள்  வழங்கப்பட்ட தண்டனை இப்போது ஆயுள் தண்டனையாக மாறியிருக்கிறது.

#

பெண்களை பாலியல் வன்முறை செய்கிறவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட 7 ஆண்டு தண்டனை இப்போது 20 ஆண்டாக உயரத்தப்பட்டுள்ளது.

 

#பாலியல்வன்முறை #சிறுமிகள்மீதானவன்கொடுமை #பாலியல்

 

இடுக்கி அணை நிரம்புகிறது:உஷார் நிலை!

கருணாநிதியை இழிவு படுத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ராம் விலாஸ்பாஸ்வான்?

சிறப்பு மருத்துவர்கள் கோபாலபுரம் வருகை 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி!

இயற்கை வாழ்வுக்கும் மரபுக்கும் இடையில் வதைபடும் நவீன மருத்துவம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*