சோனியாவை சிக்க வைக்க சிபிஐ நடத்திய பேரம் அம்பலம்!

கலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு!

தியாகு பாணி Vs கலைஞர் பாணி

“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர்!

பிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன?

அகஸ்டா வேஸ்ட் லேண்ட் விவகாரத்தில் சோனியாகாந்தியை நேரடியாக சிக்க வைக்க இடைத்தரகர் ஒருவரிடம் சிபிஐ பேரம் பேசிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நரேந்திர மோடி பிரதமரான பிறகு சிபிஐ. வருமானவரித்துறை போன்ற நாட்டின் உயர் நிறுவனங்கள் அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ள நிலையில், அகஸ்டா வேஸ்ட் லேண்ட் விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் துணைவியாருமான சோனியாகாந்தியை சிக்க வைக்க இடைத்தரகர் ஒருவருடன் சிபிஐ நடத்திய பேரம் தொடர்பாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2010-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டு நிறுவனமான அகஸ்டா வேண்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இந்தியாவின் முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டிற்காக 12 அதி நவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டது. இதற்காக 3,600 கோடி அளவுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் 362 கோடி ரூபாய் கமிஷன் கைமாறியதாக அப்போது பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் குற்றம் சுமத்திய நிலையில், இது தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கு தொடர்பான விவகாரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இந்த ஆயுத பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவர் இந்தியா டுடே இதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில்,
“ ஹெலிகாப்டர் வாங்கிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும், அகமது படேலையும் சிக்க வைக்க சிபிஐ கேட்டுக் கொண்டது. இந்த வழக்கில் அவர்கள் பெயரை நான் இணைத்துக் கூறியிருந்தால் என்னை விட்டிருப்பார்கள்.இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகள் இது தொடர்பாக என்னிடம் பேசிய சிசிடிவி காட்சிகளை நான் பெற முடியும். இது தொடர்பாக என்னை மூன்று முறை அதிகாரிகள் சந்தித்தார்கள். சிபிஐ பொய் சொல்கிறது “ என்று கூறும் கிறிஸ்டியன்.
சோனியாகாந்தியை தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும் என தவறான வாக்குமூலம் கொடுக்க சிபிஐ கிறிஸ்டியனை நிர்பந்தித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சிபிஐ கிறிஸ்டியன் மைக்கேலை ஐக்கிய அரபு எமிரேட்சில் வைத்து விசாரிக்கவில்லை. அவரது வழக்கறிஞர் தவறான தகவல்களை கூறுகிறார் என்ற சிபிஐ மறுத்துள்ளது.
இது தொடர்பாக முன்னதாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர். ராஜீவ் சுகலா:-
“அகஸ்டா வேஸ்ட்லேண்ட் விவகாரத்தில் கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் மோடி அரசு மற்ரும் அவரது விசாரணை அமைப்புகள் சோனியாவின் பெயரை இந்த வழக்கில் சேர்க்கும் படி நிர்பந்திப்பதாக அவரது வழக்கறிஞர் ரோஸ்மேரி பாத்ரிஸி தெரிவிப்பதாக காங்கிரஸ் குற்றம் சுமத்தியது.
பிரதமர் மோடியின் குஜராத்தில் பாஜக வெற்றிக்கு பெரும் சவாலாக இருப்பவர் அகமது படேல் அவரையும், அடுத்து வர விருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சோனியாகாந்தியையும் குறிவைத்து அகஸ்டா வேண்ட்லேண்ட் விவகாரத்தில் இவர்களை சிக்க வைக்க முயற்சித்த சம்பவம் தரகர் முலம் அம்பலமாகி இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

#அகஸ்டாவேண்ட்லேண்ட் #ஹெலிகாப்டர்பேரம் #ஆயுதபேரம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*