தன் வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர்!

கலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு!

தியாகு பாணி Vs கலைஞர் பாணி

“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர்!

பிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன?

மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்தும் சிலர் எளிதில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தன் வீட்டிற்கு தானே தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது போன்று செய்து விட்டு பழியை சிறுபான்மை மக்கள் மீது போட்டு நாடகமாடுவது தமிழகத்திற்கு புதியது அல்ல. இப்படி கைது செய்யப்பட்டவர்கள் பலர் என்னும் நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தன் வீட்டிற்கு தானே குண்டு வீசி விட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்ட நிலையில் போலீசார் விசாரணையில் பாலமுருகனே தன் வீட்டிற்கு தானே குண்டு வீசியது அம்பலமானதால் தலைமறைவாகி விட்டார் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை திருப்புவனம் அருகில் புலியூர் கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன் பாம்பாட்டி சித்தர் என்ற கோவிலை நடத்தி வருகிறார். பில்லி சூனியம், பேய் விரட்டுவது. சூனியம் வைப்பது என தொழிலில் கொடி கட்டிப்பறக்கும் இவருக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் ஆதரவு வலுவாக இருக்கிறது. இவர் சிவகங்கை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவராகவும், தென் மண்டல இந்து மக்கள் கட்சி அமைப்புச் செயலாளராகவும் இருக்கிறார். இவர் இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று போலீசிடம் புகார் கொடுத்திருந்தார்.
இதனால் இவருக்கு போலீசார் அவ்வப்போது பாதுகாப்பு கொடுத்திருந்தனர். ஆனால் போலீஸ் பாதுகாப்பு நிரந்தரமாக வேண்டும். ஆயுதமேந்திர போலீஸ் உதவியுடன் கம்பீரமாக வலம் வர வேண்டும் என விரும்பிய பாலமுருகன். தன் டிரைவர் மூலம் தென்காசியில் இருந்து இரு சக்கர வாகனம் ஒன்றை திருடி வந்து. தன்னுடைய நண்பர்கள் மூலம் அதன் மீது பெட்ரோல் குண்டு வீசியதோடு, தன் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதைச் செய்து விட்டு பழியை இஸ்லாமியர்கள் மீது போட இதை விசாரிக்க சிவகங்கை டி.எஸ்.பி திருமலைக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸார் விசாரணையில் இவர்கள் நடத்திய நாடகம் அம்பலமாக பாலமுருகனுக்காக பெட்ரோல் குண்டு வீசிய பனையூர் பிரசாந்த் , சிந்தாமணி கார்த்திக், மதுரை கீரைத்துறை விஜய், கார்த்திக், முருகன் ஆகியோரை கைது செய்துள்ளது போலீஸ். தனக்காக குண்டு வீசியர்கள் கைது செய்யப்பட்ட உடன் பாலமுருகனும், அவருடைய தம்பியும் எஸ்கேப் ஆக அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 

#hindu_makkal_katchi #அர்ஜூன்சம்பத் #இந்துமக்கள்_கட்சி #தனக்குத்தானே_பெட்ரோல்குண்டு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*