தம்பிக்கு தனி விமானம்: ஓபிஎஸை சிக்க வைத்த இபிஎஸ்!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பிக்கு தனி விமானம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் கடுப்பில் இருக்கிறார். இதனால் அதிமுகவிற்குள் ஆங்காங்கே மோதல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் சுவாசக்கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்தார். மது பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், மத்திய இராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் உதவியுடன் தனி விமானத்தில் பாலமுருகன் மதுரையில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்டார். அரசு பதவிகள் எதிலும் இல்லாத பால்பண்ணை தொழில் செய்து வந்த ஒரு நபர் துணை முதல்வரின் தம்பி என்பதால் இராணுவ விமானம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
துவக்கத்தில் இந்த விவகாரம் யாருக்கும் தெரியவில்லை. காரணம் இது நடந்தது ஜூலை முதல் வாரத்தில், சென்னை கொண்டு வரப்பட்ட பாலமுருகனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார்.
ஆனால் அதன் பின்னர்தான் வில்லங்கமே உருவானது. சென்னையை அடுத்த வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள்.
பன்னீர்செல்வம் எதற்காக டெல்லி சென்றுள்ளார்? என்று கேட்க எடப்பாடி பழனிசாமியோ..
பன்னீர்செல்வம் தம்பிக்கு உடல் நிலை சரியில்லாத நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வர உடனடியாக தனி விமானம் ஏற்பாடு செய்து தந்ததற்கு அமைச்சர்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க டெல்லி சென்றுள்ளார் என்றார்.
அப்போதுதான் ஊடகவியலாளர்களுக்கு “என்னாது தனி விமானத்தில் பன்னீர்செல்வம் தம்பி கொண்டு வரப்பாட்டாரா?” என்று அதிர்ச்சியடைந்தார்கள்.
என்றாலும் அது பெரிதாக பிளாஷ் ஆகாத நிலையில் டெல்லி சென்ற பன்னீர்செல்வத்தை நிர்மலா சீத்தாராமன் சந்திக்கவில்லை என்ற செய்தியை இராணுவத்துறை அமைச்சகமே அறிவிக்க, அப்போதுதான் ஒரு கேள்வி அனைவருக்குமே எழுந்தது பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனால் ஒரு எம்.பி ஆன மைத்ரேயனை சந்திக்கும் மத்திய அமைச்சர் துணை முதல்வரை ஏன் சந்திக்கவில்லை என்று விசாரித்த போதுதான் தெரிந்தது. தனி விமானம் கொடுத்த விவகாரத்தில் பன்னீர்செல்வம் மீது நிர்மலா சீத்தாராமன் ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறார் என்று, மொத்தத்தில் ரகசியமாக வைக்க வேண்டிய இராணுவ விமான விவகாரத்தை ஊடகங்கள் மத்தியில் போட்டுடைத்த இபிஎஸ் மீது ஓபிஎஸ் கடுப்பில் இருக்கிறார். நிர்மலா சீத்தாராமன் இவர்கள் இருவர் மீதும்கடுப்பில் இருக்கிறார்.
இந்த விவகாரத்தில் விரைவில் வழக்கு தொடரப்பட இருக்கிறது. இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் விரைவில் வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#ஒபிஎஸைசிக்கவைத்தைஇபிஎஸ் #தம்பிக்குதனிவிமானம் #நிர்மலாசீத்தாராமன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*