தியாகு பாணி Vs கலைஞர் பாணி

“என் உயிரினும் மேலான”- எப்படி இருக்கிறார் கலைஞர்!

பிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன?

கலைஞர் மீது தமிழ்த்தேசியத் தலைவர் தியாகு முன்வைத்த விமர்சனங்கள் தியாகு பாணி, கலைஞர் பாணி என்ற இரண்டு வடிவமைப்புகளை நம்முன் வைக்கிறது. தியாகு பாணி என்றால் என்ன? ஒரு அரசியல் கோட்பாடை முன் வைத்து நண்பர்களையும், எதிரிகளையும் கறாராக வரையறுப்பது. அதில் நீக்குபோக்குகளுக்கு இடமில்லை. தனது அரசியல் கோட்பாடுகளிலிருந்து சிறிது பிசகுபவர்களுக்கும் இடமிருப்பதில்லை. தியாகுவிடம் இணைந்திருந்தவர் தான் பேராசிரியர் சுபவீ. தன்னாட்சியா? தன்னுரிமையா? என்று மயிர்பிளக்கும் விவாதம் நடத்தியதில் சுபவீ தமிழ் தமிழர் இயக்கத்தில் தொடர்ந்து செயல்பட முடியாமல் போனது. தியாகு – சுபவீ இருவருக்குமிடையேயான அப்போதைய உறவு கலைஞர் – பேராசிரியர் உறவு போன்றது எனலாம். கலைஞருக்கும், பேராசிரியருக்கும் இடையே கூட வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் வேறுபாடுகளுக்கிடையே ஒரு இசைவிணக்கம் தியாகு பாணி அரசியலிடம் அறவே இல்லை. தியாகு பாணியில் இருக்கும் இன்னொரு மிகமுக்கியமான பிரச்சினை எதிரி என்று வரையறுக்கப்பட்ட சக்திகளின் முரண்பாட்டை வசமாக்கிக் கொள்ளும் திறனின்மை. உதாரணத்துக்கு பி.ஜெ.பி.க்கும், காங்கிரசுக்கும் என்ன வேறுபாடு என்று தியாகுவிடம் கேளுங்கள். இரண்டு கட்சிகளும் ஒன்று தானே! தமிழ்த்தேசியத்தின் எதிரிகள் என்பார்.

தோழர் தியாகு

இதற்கு மாறாக, கலைஞர் பாணி என்பது சற்றே கற்பனைத்திறனுடன் இயங்கும் அரசியல். ஒரு பிரச்சினைக்கு தீர்வாக காரியசாத்தியமான பலவற்றை முயற்சிப்பது. சேதுசமுத்திரத் திட்டத்துக்கு தடை ஏற்பட்ட போது, ‘இராமன் எந்த இஞ்சியனரிங் கல்லூரியில் படித்தான்?’ என்று கேட்டுவிட்டு, ‘வேண்டுமானால், இராமச்சந்திரன் கால்வாய்’ என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள். திட்டத்தை நிறைவேற்ற தடை ஏற்படுத்தாதீர்’ என்றும் கூறினார். தியாகுவின் பார்வையில் இது சந்தர்ப்பவாதம். ஆனால் கலைஞர் பாணியில் அதன் நோக்கம் தான் முக்கியமானது. காங்கிரசுடன் கூட்டணிக்கு முன்னர் மூன்றாம் அணி தான் கலைஞரின் இயற்கை தேர்வாக இருந்தது. 1996 தேர்தலில் பெருவெற்றி பெற்ற உடன் தனது முதல் சாய்ஸ் வி.பி.சிங் என்றார். மூன்றாம் அணி சரிப்படவில்லை என்றவுடன் சோர்ந்து போகாமல் காங்கிரஸ் கூட்டணியை விரும்பினார். பிஜெபிக்கும், காங்கிரசுக்கும் உள்ள வேறுபாடு பற்றிய புரிதல் கலைஞர் பாணி அரசியலிடம் உண்டு. அது தமிழ்ச்சமூகத்துக்கு முதன்மை எதிரி எது என்ற தெளிவை வழங்குவது.

எது இங்கு சிறந்தது என்று வாதிடுவதல்ல இப்பதிவின் நோக்கம். இரண்டுமே நமது மண்ணை பண்படுத்தவும், நமது அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டு உரிமைகளை காக்கவும் துணைநிற்க வேண்டும். இந்த இரண்டு பாணிகளுமே நட்பு முரணுடன் முன்நகர வேண்டும்.

-ராஜ்

#திராவிட_அரசியல்  #தமிழ்தேசியம் #திராவிடம்_தமிழ்தேசியம் #கருணாநிதி

கருணாநிதியை இழிவு படுத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ராம் விலாஸ்பாஸ்வான்?

சிறப்பு மருத்துவர்கள் கோபாலபுரம் வருகை 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி!

இயற்கை வாழ்வுக்கும் மரபுக்கும் இடையில் வதைபடும் நவீன மருத்துவம்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*