தேர்தல்களில் தோற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப் போகும் பாஜக!

பூச்சட்டி சுமந்த சித்தாராம்யெச்சூரி பிரச்சாரமும் பின்னணியும்!

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் நிலையில், அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வென்ற பிறகு அந்த வெற்றியை மகாத்தான வெற்றியாக இந்திய மக்களிடம் பிரச்சாரப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லாதீர்மானம் இன்று கொண்டு வருகிறது. தெலுங்குதேசம் உறுப்பினர்கள் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடந்த போது தெலுங்கு தேசம் கட்சி விவாதத்தை துவங்கி வைத்து பேசியது.இந்த விவாதத்தை புறக்கணித்து பாஜகவின் கூட்டணி கட்சியான பிஜூ ஜனதா தள எம்பிக்கள் 19 பேர் வெளிநடப்பு செய்தனர்.  அது போல தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா எம்.பிக்கள் இன்றைய கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

தன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி பிரதமர் மோடி  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில்:-

“ நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இன்று மிக முக்கியமான நாள். இன்றைய விவாதம் ஆக்கபூர்வமாகவும், விரிவாகவும் நடக்கும் என நம்புகிறேன். இதற்காக மக்களும் அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.நாடே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது”என்று டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது. அதிமுகவும் வெளிநடப்பு செய்ய இருக்கும் நிலையில், பாஜக அரசு கவிழாமல் இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறும். அடுத்தடுத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வரும் பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதை வைத்து அதை பிரமாண்டமான வெற்றியாக மக்களுக்குக் காட்ட தீவிரம் காட்டி வருகிறது.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*