நம்பிக்கையில்லா தீர்மானத்திலிருந்து பாஜகவைக் காப்பாற்றும் அதிமுக!

சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை: கொதிக்கும் சமூக வலைத்தளம்!

பெருங்கடல் வேட்டத்து ஆவணப்பட பகிர்வுகள் மொத்தமாக வாசிக்க

பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் :ஸ்டாலின் கோரிக்கை!

பால்கட்டுதல் என்பதில் இவ்வளவு பிரச்சனையா?- டாக்டர் துரைராஜ்
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது மறைமுகமாக பாஜகவுக்கு உதவும் முடிவை அதிமுக எடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பாஜக இழுத்தடித்ததைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து மத்திய ஆட்சியிலும் பங்கேற்ற தெலுங்கு தேசம் அக்கூட்டணியை விட்டு வெளியேறியது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டும் வந்தது. ஆனால் அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை துளியும் கண்டிக்காத தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு மத்திய அரசின் நாடகங்களுக்கு துணை போனது. ஆனால், அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர விடாமல் தொடர்ந்து அவையை முடக்கியது.
கடைசிவரை தெலுங்குதேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் கொண்டு வர விடாமல் பார்த்துக் கொண்டது அதிமுக. இது நாடு முழுக்க பல்வேறு விமர்சனங்களை உருவாக்கிய நிலையில், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்தது ஆளும் அதிமுக அரசு.
இந்நிலையில், இப்போது துவங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சபாநாயகர் சமித்ரா மகாஜன் தெலுங்குதேசத்தின் மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார்.வருகிற வெள்ளிக்கிழமை இந்த மனு மீது விசாரணை நடைபெற இருக்கும் நிலையில், அவையில் இரண்டு பிரச்சனைகளை எழுப்ப தீர்மானித்துள்ளது அதிமுக, ஒன்று அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராகவும், யூ.ஜி.சி மசோதாவுக்கு எதிராகவும் அவையை முடக்க திட்டமிட்டுள்ளது. கடந்த முறை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர விடாமல் பாஜகவுக்கு உதவிய அதிமுக இம்முறை இரு மசோதாக்களை எதிர்ப்பதாகக் கூறி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர திட்டமிடுகிறது.
திமுக செயல் தலைவர் அதிமுக பாஜகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே பதிலளித்துள்ளார் “பாஜகவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது” என்று தெரிவித்துள்ளார். ஒரு வேளை ஆதரித்தால் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான ராமலிங்கம் வளைக்கப்படலாம் என்பதால் இப்போதைக்கு பணிந்து செல்வதைத் தவிற எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழியில்லை. இல்லை என்றால் பதவியை பறித்து பன்னீர்செல்வத்தை முதல்வராக்கவும் தயாராகி விட்டார்களாம் டெல்லி எஜமானவர்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*