பாஜகவின் அஸ்திரங்கள் எடுபடுமா தமிழகத்தில்?

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ராம் விலாஸ்பாஸ்வான்?

சிறப்பு மருத்துவர்கள் கோபாலபுரம் வருகை 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி!

இயற்கை வாழ்வுக்கும் மரபுக்கும் இடையில் வதைபடும் நவீன மருத்துவம்!

திருடும் நிலையில்தான் பெண் காவலர் உள்ளாரா?

மரபை மீட்போம் என்பதும் மூட நம்பிக்கைதான்!

இன்றைய தேதி வரை தமிழகத்தில் பாஜகவுக்கு நேரடியாக எந்த செல்வாக்கும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வலுவான கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதாலும், குமரி மாவட்டத்தில் வாக்குகள் சிதறியதாலும் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது அவருக்கு சொந்த தொகுதியிலேயே அதிருப்தி உருவாகியிருக்கிறது.
இது போக கோவை, திருப்பூர், போன்று எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் வசிக்கிறார்களோ அங்கெல்லாம் பாஜகவுக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது. ஆனால் அந்த தொகுதிகளில் வெல்லும் அளவுக்கான செல்வாக்கு அல்லது அது. அதனால்தான் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நேரடியாக அல்லாமல் பாஜக கணிசமான இடங்களை கைப்பற்ற தமிழகத்தில் நினைக்கிறது.
ஆனால் அதற்கு எங்கே போவார்கள். ஆர்.கே.நகரில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் மட்டுமே பெற முடிந்த கட்சி 40 தொகுதிகளுக்கும் ஆசை படுவதை எப்படி எடுத்துக் கொள்வது என்ற கேள்வி நமக்கு இருக்கலாம் ஆனால் பாஜக நம்ப்க்கையோடு இருக்கிறது.
மத்தியில் ஆட்சியில் வந்த நாள் முதல் பாஜகவினர் உற்சாகமாகி ஏதேதோ பேசி வந்தாலும் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு பல நாட்களின் பின்னர் மத்திய உளவுத்துறை மூலம் அவர் மீண்டு வர வாய்ப்பில்லை. அப்படியே வந்தாலும் அரசியலில் செல்வாக்குள்ள பெண்மணியாக கட்சியை தன் கைவிரல் நுனியில் வைத்திருக்க இனி அவரால் முடியாது என்பதை தெரிந்து கொண்ட பாஜக தமிழகத்தின் தன் ஆதிக்கத்தை மத்திய அரசின் உதவியுடன் படர விட்டது.
அப்போது அமைச்சராக இருந்த வெங்கையாநாயுடு, கவரனராக வந்த வித்யாசாகர் ராவ், உள்ளிட்ட பலரும் பாஜகவுக்கு உகந்த சூழலை உருவாக்கினார்கள். ஜெயலலிதா மரணடைவதற்கு முன்பே ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவரை அவசர அவசரமாக முதல்வரும் ஆக்கினார்கள். ஆனால் நினைத்தது போல எதையும் செய்ய முடியவில்லை. சசிகலா தலைமையில் கட்சி உடைந்தது. அவருக்கே பெரும்பான்மை செல்வாக்கு இருந்த நிலையில், கிடப்பில் போடப்பட்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கு வர சசிகலா சிறைசென்றார் . அவரால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை ரெய்ட் அடித்தே வழிக்குக் கொண்டுவந்தார்கள்.
நேரடியாக அல்லாமல் அதிமுகவின் மூலமாக தமிழகத்தை கைப்பற்ற துடிக்கும் பாஜக துவக்கம் முதலே வருமானவரித்துறை ரெய்டை ஒரு கருவியாக பயன்படுத்தி ஆட்சியை கட்டுப்படுத்தியதாக இந்தியா முழுக்க குற்றச்சாட்டுகள் எழுந்தது. தலைமைச் செயலகத்திலும், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வீட்டிலும் அடிக்கப்பட்ட ரெய்ட் கிரிஜா வைத்தியநாதனை பதவிக்குக் கொண்டு வந்தது. இன்று தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை பாஜகவினர் ஆளும் கட்சிக்கு நிகரான செல்வாக்கோடு வலம் வருகிறார்கள்.
அவர்களின் அடுத்த திட்டம் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுகவை வைத்து அதிக இடங்களைக் கைப்பற்றுவதுதான். ரஜினியை அதிமுகவுடன் கூட்டணி சேர்த்து அதில் பாஜகவையும் இணைத்து அதிமுக முகத்தில் வெல்லலாம். அதிமுகவினரில் கணிசமானவர்களை பாஜகவுக்குள் இழுத்து தேர்தலை சந்திக்கலாம். ஒட்டு மொத்தமாக அதிமுக அதிருப்தி வாக்குகளை சிதறிடித்து திமுகவை தோற்கடித்து அதிமுகவை கலவையான கூட்டணியாக்கி 40 தொகுதிகளையும் வெல்வதுதான் பாஜகவின் திட்டம்.

அதிமுகவினரின் நிலையோ தர்மசங்கடமாக உள்ளது. பொறிக்குள் சிக்கிய எலி மாதிரி ஒபிஎஸ்-இபிஎஸ் ஆகி விட்டார்கள். ஆனால் இன்றைய அதிமுகவில் இவர்கள் இருவருக்குமே செல்வாக்கில்லை.மக்களிடமும் செல்வாக்கில்லை கட்சிக்குள்ளும் செல்வாக்கில்லை என்னும் நிலையில், அதிமுகவில் ஓரளவு செல்வாக்கோடு வலம் வரும் தினகரனை தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளும் நடக்கிறது. ஆனால் அவர் இதன் ஆபத்தை அறியாமல் இல்லை. பாஜகவை வைத்து பன்னீரையும், பழனிசாமியையும் அரசியலில் இருந்து ஒழிக்க நினைக்கிறார் அவர். ஆனால் அது நடக்குமா என்பது தெரியவில்லை.
ஆனால், இதில் பாஜகவுக்கு உள்ள நடைமுறை சிக்கலே இதுதான். முன்னர் எப்போதையும் விட பாஜக தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பையும் ஏன் வெறுப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு பாஜக பற்றிய எதிர்மறையான சிந்தனைகள் தமிழக மக்களிடம் ஆழமாக வேறூன்றியிருக்கிறது.
முதலில் பொது தளத்தில் அதாவது சமுக வலைத்தளங்கள், அரசியல், ஊடக தளங்களில் நிலவும் அதிருப்தியை அது சரி செய்ய நினைக்கிறது. பேச்சுரிமைக்கும், போராடும் உரிமைக்கும் தடை கொண்டு வரப்படுவது அதனால்தான்.
சமூக வலைத்தளங்கள் அடுத்து குறி வைக்கப்படுகின்றன. ஆனாலும் இதை எல்லாம் செய்தால் பாஜக அரங்கிற்கு வர முடியுமா என்றால் இவைகளை கற்பனை செய்து பார்க்கலாம் ஆனால் களத்தில் நிலை வேறாக உள்ளது. வெவ்வேறு முகமூடிகளோடு பாஜக வருகிறது என்பதற்காக தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். மிக முக்கியம் பாஜகமீது அதிக வெறுப்போடு இருப்பவர்களில் 99% பேர் ஆன்மீகவாதிகள். ஆமாம் இந்து மத நம்பிக்கையுள்ள விவசாயிகள்.

 

#தமிழகத்தில்_பாஜக_ஆட்சியைப்_பிடிக்குமா #தமிழகத்தில்_அதிமுக #தமிழிசை #தமிழக_பாஜக

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*