பிராணமர் அல்லாத அர்ச்சகர் நியமனம் யதார்த்தம் என்ன?

கருணாநிதியை இழிவு படுத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ராம் விலாஸ்பாஸ்வான்?

சிறப்பு மருத்துவர்கள் கோபாலபுரம் வருகை 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி!

இயற்கை வாழ்வுக்கும் மரபுக்கும் இடையில் வதைபடும் நவீன மருத்துவம்!

தமிழகத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் ஒருவர் கோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதையொட்டி பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இரு தரப்பினருமே கொண்டாடிய நிலையில், உண்மையில் தமிழகத்தில் சட்ட ரீதியாக யார் வேண்டுமென்றாலும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால், ஆகம மரபுரிமையை மீறக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதால். நியமிக்கப்பட்டிருப்பவர் அரசு ஊதியம் வேண்டுமென்றால் பெறலாம். ஆனால் கோவிலில் அர்ச்சனைகளை அவர் செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நியமனம் தொடர்பாக ரகசியம் நிலவும் நிலவும் நிலையில்,
இந்த தகவலை அலசுகிறது கோபால கிருஷ்ணன் சங்கர நாராயணணின் பதிவு.
காலையிலிருந்து ஒரு செய்தி உலவிக் கொண்டிருக்கிறது. மதுரையில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் ஒன்றில் ஒரு பிராமணரல்லாத இளைஞர் அர்ச்சகராக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். அவர், 2006-ல் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பயிற்சியை முடித்து அர்ச்சகராவதற்கு தகுதிபெற்றவர். இவருக்கு அர்ச்சகர் பணி கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர்’ ஆவது தொடர்பான வழக்கில் 2015-ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. ‘ஆகமங்களையும் பூஜை முறைகளையும் கற்றறிந்த யார் வேண்டுமானாலும் அர்ச்சகரகளாக நியமிக்கப்படலாம். ஆனால் அந்த நியமனம் சம்பந்தப்பட்ட கோவிலின் ஆகம விதிகளை மீறக் கூடாது’ என்று சொன்னது அந்தத் தீர்ப்பின் முக்கியமான பகுதி. இப்போது பணியில் அமர்ந்துள்ள இளைஞர் ஆகம விதியை மீறாமல்தான் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி என்றால் குறிப்பிட்ட சாதியின் குறிப்பிட்ட உட்பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது அந்தக் கோவிலின் ஆகம விதிகளில் சாதி/உட்பிரிவு தொடர்பாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த குழப்பத்தை நாம் முதலில் தெளிவுபெற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, “முதல் முறையாக தமிழக அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கோயில் ஒன்றில் பிராமணரல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்று இந்த செய்தியை முதலில் வெளியிட்ட DNA தெரிவிக்கிறது. இதை எடுத்தாண்ட மற்ற ஊடகங்களும் இதையே சொல்கின்றன. ஆனால் அறநிலையத் துறையின் கீழ் வரும் பல கோயில்களில் பிராமணரல்லாத அர்ச்சகர் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் அந்தக் கோவிலின் ஆகமப்படி அர்ச்சகர் எந்த சாதி,உட்பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டுமோ அதைச் சேர்ந்தவராக இருப்பார்கள். எனவே தமிழகத்தின் முதல் பிராமணரல்லாத அர்ச்சகர் என்ற கூற்று பிழையானதாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இவை எல்லாமே நான் எழுப்பும் சந்தேகங்கள்தான். நான் கொடுத்த தகவல்களிலும் பிழை இருக்கலாம். யாராவது விவரம் அறிந்தவர் தெளிவுபடுத்தி விளக்கினால் நல்லது.

#அனைத்துசாதியினரும்_அர்ச்சகர் #சைவம்_வைணவம் #கருவரையில்சாதி #தீண்டாமை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*