புதிய தலைமுறை நெறியாளர் மேற்கோளிட்ட அந்தக் கவிதை இதுதான்!

வகுப்பறை மோதல் :மாணவர் உயிரிழப்பு -video

அமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி!

ராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் தாக்குதலுக்கு தயார்?

மோடிக்கு ராகுல் செய்த கட்டிப்புடி வைத்தியம்!

தேர்தல்களில் தோற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப் போகும் பாஜக!
புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகேயன் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியை திறம்பட நடத்தி வருகிறார். காட்சி ஊடக விவாதங்களில் நிதானத்தை கடைபிடித்து ஆழ்ந்த அர்த்தமுள்ள கேள்விகளை சூசகமாக கேட்பதில் கார்த்திகேயன் தனிச்சிறப்பு பெற்றவர். பொதுவாக வலதுசாரிகளின் தாக்குதலுக்கு பல்வேறு ஊடகவியலாளர்கள் உள்ளான போதும் கார்த்திகேயன் இப்படியான சர்ச்சைகளில் சிக்காத நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்த புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் அவர் மேற்கோள் காட்டிய கவிதை ஒன்றுக்காக இந்துத்துவ சக்திகள் அவர் மீதும் கடும் தாக்குதலை நடத்தி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா துவங்கி வைத்த இந்த அச்சுறுத்தல் தொடர்பாக வருத்தம் தெரிவித்திருக்கும் கார்த்திகேயன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்:-

காயப்படுத்தும் எண்ணமில்லை: வருந்துகிறேன்
இரண்டு நாட்களுக்கு முன் புதுப் புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டிய ஒரு கவிதை சிலரின் மனதை காயப்படுத்தியிருக்கிறதை அறிகிறேன். ஒரு வார இதழில் வெளிவந்த அந்தக் கவிதையை குறிப்பிட்டதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. யார் உணர்வுகளையும் காயப்படுத்தும் எண்ணமும் இல்லை. எனினும் யார் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக முழு மனதுடன் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
சரி இந்துத்துவ சக்திகளில் மனது புண்படும் படி கார்த்திகேயன் எடுத்துக் காட்டிய கவிதை எது என்ற கேள்வி பரவலாக இருக்கும் நிலையில், அந்தக் கவிதையை வாசகர்களுக்கு முன்னால் வைக்கிறோம்.
ஆனந்த விகடன் வார இதழின் ‘சொல்வனம்’ பகுதியில் வெளியான அந்த கவிதை இதுதான்,
அந்த நாட்கள்
………………….
அந்த மூன்று நாட்களில்
கோயிலுக்குள் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும்…
எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதெனக்
கொஞ்சம் சொல்லுங்களேன்?
– க.பொன்ராஜ்
(ஆனந்த விகடன் இதழின் ‘சொல்வனம்’ பகுதியில் இருந்து…)

சபரி மலை கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் நுழைய அனுமதியில்லை. மாதவிடாய் நாட்களில் பெண்கள் கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டு விடும் என்று கோவில் நிர்வாகமும், தாத்ரிகளும் அதற்கு தடை விதித்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான பெண்கள் ஐய்யப்பனை  ஆண்களைப் போல வழிபடும் உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராக மக்கள் மன்றத்திலும், நீதித்துறை வழியாகவும் போராடி வரும் நிலையில், முற்போக்கு எண்ணம் நிறைந்த தமிழகத்தில் பொன்ராஜ் என்பவர் பெண் தெயவங்களுக்கு தீட்டு உண்டா என்பதை கேள்வியாக எழுப்பியுள்ளார்.

பிறப்பால் இந்துவான பொன்ராஜ் எழுதியுள்ள இந்த கவிதையில் என்ன பிழையிருக்கிறது. பொது வெளியில் பயன்படுத்த முடியாத அளவுக்கு இந்தக் கவிதையை பயன்படுத்தியமைக்காக கார்த்திகேயன் மீதும் கருத்துரிமை மீதும் தாக்குதல் நடத்துவது சரியா?

#கருத்துச்சுதந்திரம் #புதியதலைமுறை_கார்த்திகேயன் #தீட்டு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*