புறக்கணிக்கப்படுகிறவர்களின் குரல் -ஜோ மில்ட்டன்

ஐந்திணைகளில் வாழும் சமூகங்களில் புவியியல் ரீதியாக நிலப்பரப்பின் விளிம்பில் வாழ்வதால் பிற சமூகத்தினர் கடந்து செல்ல தேவை அமையாத காரணத்தினால் பிறரால் புரிந்து கொள்ளப் படாமல் புறக்கணிக்கப்படுகிற சமூகமாக நெய்தல் நிலத்து சமூகம் விளங்குகிறது .

நெய்தல் நிலத்து மக்கள் தங்கள் பிற தேவைகளுக்காக சமவெளியை கடந்து செல்ல தேவை இருப்பதால் சமவெளி சமூக மக்களின் வாழ்வியலை , பிரச்சனைகளை புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது . ஆனால் சமவெளி மக்கள் மீன் தேவைக்காகவன்றி மீனவ சமூகத்தின் வாழ்விடத்தை கடந்து செல்லும் தேவை அரிதாகவே அமைவதால் மீனவ மக்களின் வாழ்வியலையும் , அரசியல் சமூக பிரச்சனைகளையும் அறிந்து கொள்வதில் இயற்கையாகவே ஒரு முட்டுக்கட்டை இருக்கிறது .

எளிதாகச் சொல்வதென்றால் , சமவெளி மக்களின் பிரச்சனைக்காக அவர்கள் பேருந்தை மறித்தால் அதைத் தாண்டிய சமவெளி மக்களுக்கும் , விளிம்பில் இருக்கும் மீனவ மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் . அது கவனம் பெறும் . அதுவே விளிம்பில் இருக்கும் மீனவ மக்கள் தங்கள் பிரச்சனைக்காக தங்கள் இடத்தில் பேருந்தை மறித்தால் அதனால் பாதிக்கப்படுவது அவர்களாக மட்டுமே இருக்கும் . எனவே அது எந்த நிர்பந்தத்தையும் ஏற்படுத்தாது . ஓகிப் புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் தங்கள் வாழ்விடத்தில் போராடிய போது கண்டுகொள்ளப்படாததால் உள்நாட்டில் குழித்துறைக்கு வந்து போராட வேண்டியிருந்தது அதனால் தான் .

ஓகிப் புயல் பாதிப்பினால் எழுந்த மீனவர்களின் குமுறல்களை அரசு புறக்கணித்த துயரம் ஒரு புறமென்றால் , சமவெளி பொதுமக்கள் கூட அதை புரிந்து கொள்வதில் இருந்த அலட்சியமும் , சமூக இடைவெளியும் மீனவர்களுக்குக் கொடுத்த புறக்கணிப்பின் வலி அதிகம் .

தீர்வுகள் கிடைக்கிறதோ இல்லையோ , குறைந்தபட்சம் அவர்கள் குரலாவது கேட்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ‘பெருங்கடல் வேட்டத்து ‘ என்ற ஆவணப்படத்தை நண்பர் அருள் எழிலன் மிக நேர்த்தியாக உருவாக்கியிருக்கின்றார் .

.#fisherman_documentary #ockhi_cyclone_documentary #ockhi_documentary #cyclone_documenrary #ஓக்கிபுயல்_ஆவணப்படம் #ஓகிஆவணப்படம் #அருள்_எழிலன் #arulezhilan_documentary #kanyakumari_fisherman #குமரி_மீனவர்கள் #பெருங்கடல்வேட்டத்து #perungadal_vettaththu #tamilnadu_documentary

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*