‘பெருங்கடல் வேட்டத்து’ ஒளிப்பதிவாளரின் பார்வையில்..

பரந்து விரிந்த கடலில் நிகழ்ந்த வேட்டை என்பதாகும்.
கல்யாணத்தில் படம் எடுக்கிற மாதிரியோ,சார்ட் பிலிம் எடுக்கிர மாதிரியோ எளிதான காரியம் இல்லை ஆவணப் படம் எடுக்கிறது என்பது.
இங்கே நடிகர்கள் யாரும் கிடையாது, ரெடி கேமிரா ரோலிங் ஸ்டார்ட் கட் என்பது ஏதும் இல்லை, அங்க நடக்கிற நிகழ்வுகளை தான் படமா பதிவு செய்யனும். அதுவும் ”பெருங்கடல் வேட்டத்து” கதை களம் துள்ள துடிக்க உறவுகளை ஓக்கி புயலுக்கு காவு கொடுத்த இடம். சும்மா ஊரில் ஒரு இழவு விழந்தாலே ஊரே சோகமா இருக்கும், இங்கே ஊர் முழுக்க இழவு வீடு அழுது வடிந்து வீங்கி போன முகங்கள் கதறுகின்ற குரல்கள் என பரிதவிப்போடு பதறிப் போய் கிடந்தார்கள்.

அருள் எழிலன் எங்களை படம் பதிவு செய்ய அழைத்ததும் அவரோட சேர்ந்து படம் பண்ண போறோம் என்கிற மகிழ்ச்சி ஆனால் அந்த ஊருக்கு போய் சேர்ந்த உடன் அத்தனை மகிழ்ச்சியும் எங்களிடமிருந்து மறைந்து போனது.

கேமிராமேன் மூவருக்கும் தெளிவா புட் நோட் போட்டு தினசரி தந்திடுவார். வேலையை பிரித்து கொடுத்தார் யார் யார் என்ன ஏரியா கவர் செய்ய வேண்டும் என்பதையும் செல்லிடுவார்.
இரவு எல்லோருடைய டேட்டாவையும் டவுன்லோடு செய்த பிறகு படம் பார்த்த பின் ஆரம்பிப்பார் அப்போது தான் எந்த இடத்தில் ரிக்கார்ட் செய்யாமல் விட்டோம், இந்த காட்சியை எப்படி எடுத்திருக்கலாம் என அட்வைஸ் கிடைக்கும் உரிமையோடு திட்டவும் செய்வார்.

படைப்பாளி தன்னை சுற்றி நடக்கிற விசயங்கள் தனக்குள்ள ஒரு விதமான சலனங்களை ஏற்படுத்துவதால் தான் தனது பதிவுகளை செய்ய ஆரம்பிக்கிறான். சில நேரங்களில் கேமிராவின் முன் நிகழும் காட்சிகளும் கோர விவரணைகளும் படப்பதிவாளர்களை தாக்கும், அவனை நிலைகுலைய செய்யும் அத்தனையும் மறந்து உறைநிலையாக்கும்.

அப்படித் தான் நானெல்லாம் படப்பதிவின் போது அழுவது, மூக்கை சீந்தியவாரு நிலை கொள்ளாமல் தவிப்பேன். அந்த நேரங்களில் பதிவு செய்ய வேண்டிய காட்சி தவறிபோகும். தனியாக சென்று சிகிரட் ஒன்றை புகைத்த பின்தான் மீண்டும் சகஜநிலைக்கு வருவேன்.
படைப்பாளி எப்போதும் ஒருவித நெகிழ்வான நிலையிலே தான் இருப்பார்கள்.

அருள் எழிலன் எங்களை சுதந்திரமாகவே இயங்க விட்டார். வேலை வங்குவதில் திறமையானவர்,பதிவினை பார்த்து பிடித்துவிட்டால் பாராட்டி கொண்டாடுவார்.

தொடர் வேலையின்னுடே மீனவர்களின் பாரம்பரிய ”அம்பா” பாடல்களை பதிவு செய்ய என்னிடம் சொன்னார்.நான் அதற்கான தரவுகளை சேகரித்து பாடல்களை பாடுக்கூடியவர்களை ஒரு இடத்திற்கு வர செய்து பாடல் பதிவு செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்து நாள் நேரம் குறித்து தயாரான போது எழிலன் என்னை கேரள பிசப் வருகையை பாலோஅப் செய்ய சொன்னார்.

நான் பிடிவாதமாக “அம்பா” படல்களை பதிவு செய்ய சென்றேன் பின்னர் நான் பதிவு செய்து கொண்டிருக்கும் இடத்திற்கே வந்து இதனை வேறு கேமிராமேனை வைத்து பதிவு செய்யலாம் என்று வாதாடி என்னை அங்கு அனுப்பி வைத்தார். அந்த வேளையில் எங்கள் இருவருக்குமிடையே சின்ன நெருடலாக இருந்தது.

ஆனால் அந்த நெருடல் நீடிக்கவில்லை ஆவணப்படத்தில் நான் எடுத்த இரண்டு காட்சிகளையும் வைத்திருந்தார். பின்னொரு நாளில் அம்பா பாடல்கள் ஸூப்பரா வந்திருக்கு என்று என்னை பாராட்டினார். சின்ன சின்ன பிணக்குகளால் தானே நட்பின் முடிச்சுகள் இன்னும் இன்னும் அதிகம் நெருக்கம் கொள்கிறது.

என்னோடு வேலை செய்த ”ஜோ” என்கிற ஜோசப் விஜய் மிக கெத்தன தம்பி, வெரி எனர்ஜெட்டிக்கான ஆள். ஜோ எப்போதும் தனது பதிவுகளில் முத்திரை பதிக்கிறவன்.

ஆவணப்படத்தின் ஓப்பனில் வருகிற கதவொன்று திறந்து கடல் முற்றம் விரிகிற காட்சி, பக்கத்து கிராமத்தில் கிருஸ்மஸ் சீரியல் லைட் கொண்டாட்ட காட்சி,அந்த எட்டு ஊர்களின் ஏரியல்வீயூவான டிரோன் கேமிரா காட்சி என பார்வையாளர்களை மிரட்டியவர் தம்பி ஜோ தான். வெள்ளித்திரையில் தனது முத்திரை பதிக்க துவங்கியிருக்கிறான். வாழ்த்துக்கள் ஜோ உனது தகுதிக்கான இடம் காத்திருக்கிறது.

அது போல இனொரு கேமிரா மூலம் படத்தினை நகர்த்தியவர் ஜெயக்கொடி தேனி ஈஸ்வரின் சிஸ்யன்.ஆவணப்படத்தில் பர்வையாளர்கள் பலர் கைத்தட்டல் எழுப்பும் பதிவுகளை செய்தவர் டயர்ட் ஆகாதவர். அருள் எழிலனோடு அதிகம் சிக்கிக் கொண்டவர் ஜெயக்கொடியை சக்கையாக பிழிந்து வேலையை வாங்கினார்.

இங்கே இணை இயக்குநராக பணியாற்றிய தங்கை சினேகாவையும் குறிப்பிட்டாக வேண்டும்.ரையிட்டிங் பேடை தூக்கிக் கொண்டு அதிகாலையிலே எங்களோடு களத்தில் இறங்கிவிடுவார். கேமிராவின் அருகாமையில் அமர்ந்து அவர் போக்கில் நேட் எடுத்துக் கொள்வார். பெண்ணாக இருந்தாலும் ஆண்களுக்கு ஈடான உழைப்பை கொடுத்தவர். நாங்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்த சின்ன பிள்ளைகளோடு இரவில் சினேகா மணலில் விளையாடும் போதுதான் தெரியும் சினேகா வயதில் சின்னவள் என்பது.

பெருங்கடல் வேட்டத்து என்கிற அருள் எழிலனுடைய ஆவணப்படத்தில் பணியாற்றியது மிகப் பெரிய அனுபம் எனக்கு. ஒளிப்பதிவு,ஆவணப்படுத்துதல்,படத்தின் மைய கருத்து சிதையாமல் காட்சி படுத்துதல், உள் அரசியல், சுய விமரிசனங்கள், நேர்மையோடு உண்மையை விவரித்தல் என பாடங்களை எங்களுக்கு கற்று தந்துள்ளது.

இன்னும் பதிவினை தாண்டி எழிலனிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய…

நிறைமாத கர்ப்பமாக இருந்தார் ராஜி அப்போது அவர் கணவர் கடலுக்கு போனவர் திரும்பி வரவில்லை ராஜியையும் அவரது வாழ்வை பதிவு செய்திருந்தோம். சோர்ந்து களைத்து தூத்தூர் ஆண்டனி ராஜ் வீட்டில் இரவில் வந்து பேசிக் கொண்டிருக்கும் போது சொன்னார் ராஜியின் பிரசவம் சூட் செய்றோம்,அது போல ராஜியோட பிள்ளையின் ஞானஸ்த்தானத்தினையும் சூட் செய்றோம் என்று,அந்த இடத்தில தான் ஒரு படைப்பாளியின் தன்மையும் எவ்வளவு நீண்ட நாட்கள் வேலை என்பதை உணரமுடிந்தது.

பின்பு இன்னொரு நாள் ராஜியை பிரசவத்திற்கு அட்மிட் செய்துள்ளார்கள் அதனை நாம் பதிவு செய்ய வேண்டும் உடனடியாக இரையுமந்துறை ஆஸ்பத்திரிக்கு போங்க என்று சென்னையிலிருந்த படியே என்னை பணித்தார்.

ராஜியின்
பிரசவத்தினை பதிவு செய்ய
நாகர்கோவிலிருந்து கேமிராவோடு காரில் பயணித்துக் கொண்டிருந்தேன் இரையுமந்துறையை நோக்கி.

வழியிலே அடுத்த போண் வந்தது ஜவஹர் ராஜிக்கு பெண்குழந்தை பிறந்து விட்டது, சும்மா கைய வீசிட்டு போய்விடாதீங்க பிள்ளைக்கு சட்டை துணி முட்டாய் எல்லாம் வாங்கீட்டு போங்க என்றார்.

ஆமாம் ராஜியின் குழந்தையிடம் அருள் எழிலன் மாமாவின் சீர் பொருட்களோடு அன்பையும் சேர்த்தே கொடுத்து வந்தேன்.

“படைப்பாளி ஆன்மாவோடும் ஆர்த்மார்த்தமாக வாழ்கிறான்”

கட்டுரையாளர் குறிப்பு : ஜவஹர்

 

நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட ஜவஹர் புகைப்படக்கலைஞர், ஒளிப்பதிவாளர் தமிழில் முன்னணி இதழ்கள் அனைத்திலும் அலங்கரித்துள்ள இவரது புகைப்படங்கள் கவனம் ஈர்ப்பவை, ‘பெருங்கடல் வேட்டத்து ஆவணப்படத்தின் மூன்று ஒளிப்பதிவாளர்களுள் ஒருவர். இயக்குநர் அருள் எழிலனின் நெருங்கிய நண்பர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*