மோடிக்கு ராகுல் செய்த கட்டிப்புடி வைத்தியம்!

தேர்தல்களில் தோற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப் போகும் பாஜக!

பூச்சட்டி சுமந்த சித்தாராம்யெச்சூரி பிரச்சாரமும் பின்னணியும்!

மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் பல கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார் அப்போது:-
“மோடி அரசு பல துறைகளில் பின் தங்கி விட்டது. பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் மோடி. மோடியின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை. ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ததில் முரண்பாடான தகவல்களை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. ரஃபேல் விமானங்களை வாங்கியதில் ஒரு அமைச்சர் பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்துள்ளார். அமித்ஷா மகன் விவகாரத்தில் மோடி அமைதியாக இருக்கிறார். பொய்யான வக்குறுதிகளை அளித்து வருகிறார் மோடி. ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் 15 லட்சம் கொடுப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆனது. காவல்காரனாக இருப்பேன் என்று சொன்ன மோடி பங்குதாரராக மாறி விட்டார். மோடியிடம் சிரிப்பைக் கண்டேன். ஆனால், அதில் பதட்டம் தெரிகிறது அவரால் என் கண்களைப்பார்த்து பேச முடியாது” என்று பேசியபோது பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். கடும் அமளி காரணமாக அவை 1-45 வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் ராகுல்காந்தி மீண்டும் பேசத்துவங்கினார்.அப்போது:-
“பெண்கள் வாழத்தகுதியற்ற நாடு இந்தியா என்று ஒரு வணிக இதழ் அட்டைப்படம் வெளியிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் இது போன்ற செய்திகள் வெளியாவது இதுவே முதல் முறை. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி அரசு தவறி விட்டது. பிரதமரும், அமித்ஷாவும் வித்தியாசமான அரசியல்வாதிகள்.அவர்கள் அதிகாரத்தை இழக்க தயாராக இல்லை. அவர்கள் பயம் கோபமாக மாறி வருகிறது” என்று ராகுல் ஆவேசாமக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த உரையை நிகழ்த்திய ராகுல்காந்தி பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கைக்குச் சென்று அவரை கட்டியணைத்தார். இதை சற்றும் எதிர்பாராத மோடி, சமாளித்தபடி ராகுலை மீண்டும் அழைத்து தோளில் தட்டிக் கொடுத்தார்.

 

#Ragul_hug_modi #indianparliment #tamilnadunews #tamilnews

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*