ரஜினி, கமல், சாதிக்காமாட்டார்கள் என்பது அதிர்ச்சி செய்தியா புதிய தகவலா?

“பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு இந்தியா” -ஸ்குவாஷ் போட்டிக்கு வர மறுத்த வெளிநாட்டு வீராங்கனை!

நல்லாட்சி, வளர்ச்சி தென்னிந்திய மாநிலங்களே முதலிடம்!

புதிய தலைமுறை நெறியாளர் மேற்கோளிட்ட அந்தக் கவிதை இதுதான்!

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அரசியலுக்கு வந்துள்ள நடிகர் கமல்ஹாசனும், அரசியலுக்கு வருவதாக சொல்லிக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வந்தால் சாதிக்க முடியாது என்று தனியார் தொலைக்காட்சி ஒன்று கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த கருத்துக்கணிப்பு புதிதாக என்ன தகவலைச் சொல்ல வருகிறது என்பது தொடர்பான கேள்வி பரவலாக எழுந்து வருகிறது.

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் ஊழல் ஒழிப்பு, அரசியலில் தூய்மை போன்ற அன்னா அசாரே பாணி கோஷங்களை முன் வைத்து மக்கள் நீதி மைய்யம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். அது போல நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று அறிவித்து தன் மன்றங்களை தயார் செய்து வருகிறார்.
ஆனால், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்களில் எவருமே இவர்களைப் போல சினிமாவில் ஒரு காலும் அரசியலில் இன்னொரு காலையும் வைக்கவில்லை. மேலும், தங்களுக்கு உகந்த சூழல் உருவாவதற்காக காத்திருக்கவும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, துவங்கி விஜயகாந்த் வரை அரசியலுக்கு வந்து அரசியல் சூழலை தங்களுக்கு ஏற்றார் போல மாற்றியவர்களே அதிகம் என்னும் நிலையில், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை கமலோ, ரஜினியோ அரசியல் பற்றி பொதுவெளியில் வாய் திறந்ததே இல்லை. அவர் மரணத்தின் பின்னர் ரஜினி துக்ளக் ஆண்டு விழாவில் அரசியல் பேசத்துவங்கி தொடர்ந்து பேசியும் வருகிறார். இதே போன்றுதான் கமல்ஹாசனும் ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அரசியல் பேசி வருகிறார்.
இவர்கள் இருவருக்குமே தேர்தல் அரசியலில் வெல்வதற்கான அடிப்படைக் கட்டுமானம் இல்லை. பிக்பாஸ் மூலம் கிடைக்கும் புகழகை கமல் அரசியலுக்கும், சினிமா புகழை ரஜினி அரசியலுக்கும் நம்பி வரும் நிலையில்தான் சமீபத்தில் வெளியான ரஜினியின் காலா படம் எதிர்பாரா விதமாக தோல்வியை தழுவியது. இது அவருக்கு இருக்கும் செல்வாக்கைக் எடுத்துக் காட்டும் நிலையில்,
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ரஜினி கமல் இருவரும் அரசியலில் சாதிப்பார்களா என்ற கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் 51% பேர் இவர்கள் இருவராலும் அரசியலில் சாதிக்க முடியாது என்றும், 49 பேர் சாதிப்பார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பின் நம்பகக்த்தன்மையே கேள்விக்குறியது என்ற போதும், ரஜினியும், கமலும் அரசியலில் சாதிப்பதற்காக அறிகுறிகள் எதுவும் இப்போதைக்கு இல்லை. கமலும், ரஜினி இருவருமே தங்களுக்கு செல்வாக்கு இருக்கு என நம்பியிருந்தால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபித்திருக்க வேண்டும். இவர்களின் ஒரிஜினல் பலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள இன்னும் சில ஆண்டுகள் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

வகுப்பறை மோதல் :மாணவர் உயிரிழப்பு -video

அமித்ஷா கட்டுப்பாட்டில் அதிமுக: தொண்டர்கள் அதிர்ச்சி!

ராகுல் தாக்குதலில் நிலை குலைந்த மோடி:பதில் தாக்குதலுக்கு தயார்?

மோடிக்கு ராகுல் செய்த கட்டிப்புடி வைத்தியம்!

தேர்தல்களில் தோற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்லப் போகும் பாஜக!

 

#மக்கள்நீதிமய்யம் #தமிழ்செய்திகள் #தமிழக_அரசியல்_செய்திகள் #tamilnadu_political #tncurrentnews #rajini_kamal #ரஜினி_கமல்_சாதிப்பார்களா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*