வதந்திகளை நம்ப வேண்டாம் ஸ்டாலின் கோரிக்கை!

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறார் ராம் விலாஸ்பாஸ்வான்?

சிறப்பு மருத்துவர்கள் கோபாலபுரம் வருகை 24 மணி நேர கண்காணிப்பில் கருணாநிதி!

இயற்கை வாழ்வுக்கும் மரபுக்கும் இடையில் வதைபடும் நவீன மருத்துவம்!

திருடும் நிலையில்தான் பெண் காவலர் உள்ளாரா?

மரபை மீட்போம் என்பதும் மூட நம்பிக்கைதான்!

உடல் நலம் குன்றி திவீர சிகிச்சையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி தொடர்பாக பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதுமை காரணமாக உடல் நலம் குன்றியுள்ள கருணாநிதிக்கு அவரது வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்கப்படுகிறது. காவேரி மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் இருக்கும் கருணாநிதியை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்து வரும் நிலையில், கருணாநிதி பற்றிய வதந்திகள் வேகமாக பரவி வருகிறது.இதனால் பெருவாரியான தொண்டர்களும் பொது மக்களும் சென்னை நோக்கி வருகிறார்கள். கோபாலபுரம் இல்லம் அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருக்கும் நிலையில், கருணாநிதி உடல் நிலை தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
“திமுக தலைவர் கருணாநிதி தொடர்பாக விஷமிகள் தொடர்ந்து திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தொடர் சிகிச்சையின் விளைவாக கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாலும், மருத்துவர்களின் அறிவுரைப்படி பொதுமக்கள், கழக தொண்டர்கள், அவரை பார்க்க வருவதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

#கருணாநிதி_உடல்நிலை #கருணாநிதிபற்றிவதந்தி #அண்ணா_அறிவாலயம் #கோபாலபுரம்_இல்லம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*