அழகிரியால் திமுகவுக்குள் தர்மயுத்தம் நடத்த முடியுமா?

கலைஞர் சமாதியில் அழகிரி அஞ்சலி: திமுகவுக்குள் சலசலப்பு!

கேரளாவுக்கு திமுக ஒரு கோடி நிதி உதவி!

“அவர் இல்லாம நான் இல்லை” கலைஞரின் 50 வருட உதவியாளர் சண்முகநாதன்!

கருணாநிதிக்கு அஞ்சலி: மோடி வந்து சென்றதும் பாதுகாப்பை குலைத்த தமிழக அரசு!

‘பெருங்கடல் வேட்டத்து’ பற்றி கவிஞர் கனிமொழி ஜி !

இன்று கலைஞர் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி “திமுகவின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளார்கள்” என்று கூறிய கருத்து திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.உண்மையில் அழகிரியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதா அல்லது மூழ்கிய கல் ஒன்றில் இருந்து படிந்த பாசியில் இருந்து மேலெழுந்து வரும் நீர்க்குமிழியா என்பது பின்னர் தெரியவரும்.
தென் மண்டல பொறுப்பாளராக இருந்த அழகிரி மாறன் சகோதர்கள் வெளியிட்ட செய்தி காரணமாக மதுரை தினகரன் அலுவகத்திற்கு தீ வைத்தார். அதில் சில உயிர்கள் போக பின்னர் ஒரு வழியாக அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. ஆனால் பின்னர் திமுக தலைவரான ஸ்டாலினுடன் நேரடியாக மோதிய அழகிரி கருணாநிதியே முகம் சுழிக்கும் வகையில் கட்சிக்கு விரோதமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி பல முறை தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்தும் மதுரையில் இருந்து வரமறுத்த அழகிரி. பாஜக தலைவர்கள், உள்ளிட்ட திமுகவுக்கு எதிராக களமாடிக் கொண்டிருந்த பல தலைவர்களை அப்போது சந்தித்து வந்ததோடு அவர்களிடம் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்ததோடு திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் ஊடகங்களில் வலம் வரத்துங்கிய நிலையில், அழகிரியோடு இருந்தவர்களில் பெரும்பானையானவர்கள் ஸ்டாலின் பக்கம் வந்து விட அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்க வைத்தார் அழகிரி. அழகிரியோடு இருந்த சிலரை கருணாநிதி நீக்க பின்னர் கருணாநிதியைச் சந்தித்த அழகிரி நடவடிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைக்க அதை கருணாநிதி ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பின்னர் மேலும் மேலும் திமுகவை விமர்சித்து வந்தார்.அந்த அதிரடி முடிவை அறிவித்தார் கருணாநிதி

அழகிரி தற்காலிக நீக்கமும்- நிரந்தர நீக்கமும்

2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குவதாக திமுக அறிவித்தது.அறிவித்த கையோடு கட்சியின் தலைமை அழகிரிக்கு ஒரு வாய்ப்பாக விளக்கம் அளிக்க வேண்டுகோளும் வைத்தது.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அப்பொதைய அறிவிப்பில்:-
“கட்சிக்குள் ஏற்படும் அபிப்ராயப் பேதங்கள், கோபதாபங்களைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்றன. இந்நிலையில், தங்கள் எண்ணங்களை வெளியிடவும் கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும் அந்த அமைப்புகளை மதிக்காமலும் செயல்பட்டுள்ளனர்.வேண்டுமென்றே திட்டமிட்டு கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்துள்ளனர். திராவிட இயக்கம் தொடக்கம் முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள், இயக்கத்துக்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொதுத் தோற்றத்தை உருவாக்கி, தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு, ஒரு சிலர் மீது குறிப்பாக மதுரை மாவட்டத்தில் திமுக தோழர்கள் சிலர் மீது, பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க துணை போகின்றனர். இத்தகைய துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நெரடியாகவே ஈடுபட்டும், கட்சியின் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, இனியும் தொடர்ந்து கட்சியில் நீடிப்பது முறையல்ல. அது கட்சியின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்துவிடும் என்பதால் அவர், திமுக உறுப்பினர் பொறுப்பு உள்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தை ஏற்று, ஒற்றுமையோடும் கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த அறிக்கையின் பின்னர் அழகிரியோடு மிச்சம் மீதி இருந்த பிரமுகர்களும் ஸ்டாலினோடு வந்து சேர்ந்து விட்டார்கள். அழகிரி கட்சி தலைமைக்கு விளக்கம் எதுவும் அழிக்காமல் தான் போன போக்கில் பேசிக் கொண்டே இருக்க,2014 மார்ச் மாதம் 25-ஆம் தேதி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் அழகிரி இது தொடர்பாக பதிலளித்த கருணாநிதி:-

“மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டதற்குப் பிறகு உரிய விளக்கங்களை அதற்கு அளிக்காமல், மேலும் மேலும் தி.மு. கழகத்தை விமர்சிப்பதாலும், தி.மு. கழகத் தலைவர்களைப் பற்றி அவதூறு கூறிவருவதாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு. கழகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் இன்றைக்கு கலந்து பேசி, அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக அறவே நீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

கருணாநிதி கட்சிக்குள் குடும்ப அரசியல் செய்திருக்கலாம்.ஆனால் தனக்குப் பின்னர் திமுகவை வழி நடத்திச் செல்லும் பாங்கும் பண்பும் ஸ்டாலினுக்கு இருப்பதாக கருணாநிதி உணர்ந்திருக்கலாம். எது எப்படி என்றாலும் திமுக என்றால் கருணாநிதிக்கு உயிர். குடும்பம் என்பது இரண்டாம் பட்சம்தான். தந்தையின் கனவுகளை ஈடேற்றும் பாங்கு ஸ்டாலினுக்கு இருப்பதாக உணர்ந்த கருணாநிதி அழகிரி ஸ்டாலின் தலைமையை ஏற்க வேண்டும் என விரும்பினார். ஆனால், அதை ஏற்காத அழகிரி தொடர்ந்து திமுகவுக்கு எதிராக பேச கடுப்பான கருணாநிதி “அழகிரி என் மகனே இல்லை” என்று அறிவித்தார்.
அத்தோடு அழகிரிக்கும் திமுகவுக்குமான தொடர்பு அறுந்து விட்டது.மகன் என்ற முறையில் கருணாநிதி நினைவு தப்பிய பின்னர் அவரை கோபாலபுரத்திற்குச் சென்று சந்தித்து வந்த அழகிரி அவர் மறைந்த பிறகு திமுகவின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கம் இருப்பதாக கூறுகிறார் இதையும் உண்மையா எனப் பார்த்து விடுவோம்.!

திமுகவில் எந்த தர்மயுத்தத்திற்கு வாய்ப்பில்லை!

மதுரையில் அழகிரிக்கு போஸ்டர் ஒட்ட ஒரு கூட்டம் இருந்தது. ஆனால், 2014 ஜனவரியில் அவர் திமுக தலைவர் கருணாநிதியால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு அவரிடமும் விளக்கமும் கேட்டார். தந்தையின் ஆன்மாவிடம் முறையிட்டதாக கூறும் அழகிரி அன்று கருணாநிதி முறையிடுங்கள் என்று விளக்கம் கேட்டும் அதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை.
பின்னர் 2014- மார்ச் மாதம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அழகிரியொடு இருந்த அத்தனை பேரும் ஸ்டாலினோடு வந்து செட்டில் ஆகி விட்டார்கள்.ஒரு வேளை தர்மயுத்தத்தை 2014-ல் நடத்தியிருந்தால் சட்ட ரீதியாகவாவது குழப்பம் உண்டு பண்ணியிருக்க முடியும்.
இப்போது சட்ட ரீதியாக அழகிரியால் திமுகவை எதுவும் செய்ய முடியாது. சரி போஸ்டர் ஒட்டியவர்களையாவது ஒழுங்காக தக்க வைத்தாரா என்றால் அதுவும் இல்லை.அழகிரி நீக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில் திமுக ஸ்டாலின் அவர்களின் முழு கட்டுப்பாட்டிலும் இருகிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் அதாவது அழகிரி இல்லாத திமுக தென்மண்டலத்தில் அதிக இடங்களை வென்று சாதித்து விட்டார்.
அவர் தலைமையில்தான் தென் தமிழகத்தில் அதிக இடங்களை திமுக வென்றும் காட்டி விட்டது.தென் மண்டல திமுகவின் முன்னாள் அழகிரி ஆதரவாளர்கள் அனைவருமே இப்போது ஸ்டாலினுடன் ஐக்கியமாகி பல ஆண்டுகள் ஆகி கட்சி ஸ்டாலின் தலைமையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது திமுக தலைவர் கருணாநிதியால் நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரால், “அழகிரி என் மகனே இல்லை” என்று வெளிப்படையாக திமுக தலைவர் கருணாநிதியே அறிவித்த ஒருவரால் மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் நடத்தியது போல நடத்த முடியாது.
காரணம் திமுக செயல் தலைவர் பதவி என்பது சர்வ அதிகாரமும் பொருந்திய சட்ட ரீதியான பதவி. பதவிகள் அல்ல அடிப்படை உறுப்பினராகக் கூட திமுகவில் இல்லாத ஒருவருக்கு திமுகவில் பதவி கொடுப்பது வேலியில் போகும் ஓணாணை மடிக்குள் எடுத்து கட்டிக் கொள்வதற்கு சமம்.

முன்னர் கருணாநிதி தலைமையிலான திமுகவை விமர்சித்த அழகிரி இப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுகவை விமர்சிக்கிறார் இது புதிது அல்ல, கடந்த நான்கு ஆண்டுகளாக விமர்சிக்கிறார்…விமர்சிக்கிறார்…விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்காக யாரும் திமுகவுக்குள் பேசவில்லை.

ஒரு வேளை அழகிரி மத்தியில் ஆழ்வோர்களின், அல்லது மாநிலத்தில் ஆழ்வோரின் கைப்பாவையாக செயல்பட்டால் ஒரு தூசி போல துடைத்துப் போட்டு விடும் அமைப்பு பலமும் குழப்பமற்ற தலைமையுமாக திமுகவுக்கு ஸ்டாலின் உருவாகி இருக்கிறார் என்பதே இப்போதைய யதார்த்தமான உண்மை!

 

#திமுகவில்_தர்மயுத்தம் #அழகிரி_ஸ்டாலின் #கருணாநிதி_மரணம் ##karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

ராஜாஜி-காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி உண்மை என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*