“அழகிரி இட்லி கடை “:சு.சாமி நக்கல்!

குல்தீப் நய்யார் -1923-1918 வாழ்வும்-மரணமும்!

தமிழகத்தில் பாம்பு மாத்திரை போதையை பரப்பும் வட மாநில கும்பல்!

வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி!

விஷமத்தனமாக பேசினாலும் அடிக்கடி ரசிக்கும் படி பேசக்கூடியவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. பாஜக அரசிலோ, காங்கிரஸ் அரசிலோ அமைச்சர் பதவி கொடுத்தாலோ, அல்லது வேறு ஏதேனும் பதவி கொடுத்தாலோ அக்கட்சி தலைவராக பதவியில் இருக்கும் வரை ஓட்டுவார். பின்னர் தனது சொந்தக் கட்சிக்கு திரும்பி விடுவார்.
தமிழக அரசியல் நிலமைகள் தொடர்பாக சில காலம் கருத்து எதனையும் கூறாமல் இருந்த சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் அழகிரி பற்றி அடித்த கமெண்ட்தான் ஹை லைட். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியால் அக்கட்சியில் இருந்து 2014-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட அழகிரி மீண்டும் தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடி வருகிறார். இதனால் திமுக எதிர்ப்பாளர்கள் உற்சாகமாகி அழகிரியை வைத்து காய் நகர்த்தலாம் என்று திட்டமிடும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி:-
“ திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலிந்தான் என்பது உறுதியாகி விட்டது. அழகிரியால் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அழகிரி இட்லி கடை மட்டுமே வைத்து நடத்த முடியும். தமிழக பாஜகவைப் பொருத்தவரை அவர்கள் கமல், ரஜினி பின்னால் ஓடுகிறார்கள். அதை அவர்கள் நிறுத்தி விட்டு தத்துவத்தை முன்னிறுத்தினால் மட்டும்தான் பாஜக வெல்ல முடியும்” என்றார்.
மதுரை இட்லி கடை விவகாரத்தில் சுப்பிரமணியன் சுவாமி தலையிட்டது குறிப்பிடத்தக்கது.

#அழகிரி_இட்லிகடை #சுப்பிரமணியன்சுவாமி #நக்கல்சுவாமி

#KeralaFloods 700 கோடி அமீரகத்தின் உதவியை மறுக்கிறதா மத்திய அரசு!

அழகிரியின் நோக்கம்தான் என்ன?

திமுக இல்லாமல் திமுக பற்றி விவாதித்த புதிய தலைமுறை!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி அருணா ஜெகதீசன்!

புலிகளை அழிக்க வாஜ்பாய் உதவினார் – ரணில் விக்கிரமசிங்கே!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*