ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிர வேண்டாம் : ஆதார் முகமை வேண்டுகோள்!

பொது சிவில் சட்டத்திற்கு முஸ்லீம் வாரியம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது!

சோனியாவை சிக்க வைக்க சிபிஐ நடத்திய பேரம் அம்பலம்!

தன் வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர்!

கலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு!

ஆதார் முகமை நிறுவனமான டிராய் தலைவரின் சவால் தோல்வியில் முடிந்த நிலையில் ஆதார் எண்களை பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய குடிமக்களின் அந்தரங்க தகவல்கள் அடங்கிய ஆதார் தகவல்கள் பாதுகாப்பானதா என்ற சர்ச்சை நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில், பணத்திற்கு ஆதார் தகவல்கள் திருடப்படுவதை சில ஊடகங்கள் வெளியிட்டு அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருந்தது.
இந்நிலையில், ஆதார் ஆணையத்தின் முன்னாள் பொது மேலாளர் ஆர்.எஸ். ஷர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் தனது 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட்டு இந்த எண்ணை வைத்துக் கொண்டு எனக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என நிரூபியுங்கள் என பொதுவெளியில் சவால் விட்டிருந்தார்.
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் ஷர்மாவின் பிறந்த தேதி, இடம், தற்போதைய முகவரி, செல்போன் எண்,பான்கார்ட் என அவரது அந்தரங்கமாக தகவல்களை எடுத்து பொது வெளியில் வெளியிட்டார். இன்னொருவர் ஷர்மாவின் வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தினார். மேலும் பலர் அவரது ஆதார் எண்ணை வைத்து ஷாப்பிங் கணக்குகளை தொடங்கினார்கள். இதனால் அவது மொபைலுக்கு பல்லாயிரம் ஓன் டைம் பாஸ்வேர்டுகள் வந்து விழ அதிர்ச்சியடைந்தார் ஷர்மா.
நாடு முழுக்க அதிர்வலைகளை இந்த விவகாரம் ஏற்படுத்திய நிலையில், “ஷர்மாவின் தகவல்கள் ஆதார் மூலம் பெறப்படவில்லை” என்று விளக்கம் அளித்தது. முதலில் சமாளித்த ஷர்மா பின்னர் இறங்கி வந்து என் மொபைலில் பேட்டரி டவுன் ஆகிறது. ஆகவே ஆதாரை மேம்படுத்த ஆக்க பூர்வமான ஆலோசனைகளைச் சொல்லுங்கள் என்றார். “ஆதார் எண்ணை பொது வெளியில் பகிர்ந்து அந்த தகவல்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை உணரவைத்த ஷர்மா மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றது காங்கிரஸ் கட்சி.
இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவாகி உள்ள நிலையில் ஆதார் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
“அடுத்தவர்களின் ஆதார் எண்கள், தகவல்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது ஆகும். இப்படி பயன்படுத்துவதில் இருந்து பொது மக்கள் விலகி இருக்க வேண்டும். ஆதார்,வங்கிக்கணக்குகள்.பான்கார்ட் உள்ளிட்டவைகளை பொது வெளியில் பகிரக்கூடாது. பொதுவெளியில் பகிர்வதில் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும்” என்று அறிக்கை விடுத்துள்ளது.
ஆதார் எண்ணை வைத்து சவால் விடப்போய் அதன் நம்பகத்தன்மை முன்னர் எப்போதையும் விட கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
#Aadhaar #UIDAI #நந்தன்நீலகேணி #ஆதார்தகவல்_திருட்டு #ஆதார்_சவால்

பாஜக சதி செய்கிறது:உள்நாட்டு போர் வெடிக்கும் -மம்தா எச்சரிக்கை!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*