ஆர்.எஸ்.எஸ் அழைப்பை ஏற்பாரா ராகுல்காந்தி?

London: Congress President Rahul Gandhi speaks at an interactive session at London School of Economics, London on Friday, August 24, 2018. (PTI Photo) (PTI8_25_2018_000049B)

கலைஞருக்கு புகழஞ்சலி கூட்டம்:அமித்ஷா பங்கேற்கவில்லை!

சென்னையின் பூர்வகுடிகள் யார்?

தமிழகத்தில் வறட்சியும் தண்ணீர் பஞ்சமும் ஏற்படும் ஆபத்து !

“முக்கியமான அரசியல் ஆவணப்படம்” -ஏர் மகாராசன்

தோழர் வளர்மதி மருத்துவமனையில் அனுமதி!

இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அடுத்த மாதம் நடத்த விருக்கும் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்க விருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த அழைப்பை ராகுல்காந்தி ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய இராணுவ கட்டமைப்பைப் போன்ற ஒரு அமைப்பு ஆர்.எஸ்.எஸ். இதை பல அறிவுஜீவிகள் ஹிட்லர் காலத்திய ஜெர்மனிய அமைப்புகளோடு ஒப்பிடுவதும் உண்டு. ஆர்.எஸ்.எஸ் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல் இந்துத்துக்களை அணி திரட்டி வரும் அமைப்பு என்ற நிலையில், அதனுடைய தேர்தல் அரசியலுக்கான வெகுசன அமைப்பாக பாஜக உள்ளது. பாஜக கட்சியில் உள்ள பெரும்பான்மை தலைவர்களும், தொண்டர்களும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள். பிரதமர் மோடி உள்ளிட்ட பெரும்பான்மை அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தே பாஜகவுக்குள் வருகிறார்கள். இந்நிலையில், ராகுல்காந்தி கடந்த பல வருடங்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

”ஆர்.எஸ்.எஸ் நாட்டை பிளவு படுத்துகிறது” என்றுபேசிய ராகுல்காந்தி. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தையும் கடுமையாகத் தாக்கி பேசி வந்தார் “மகாத்மா காந்தியின் படத்தைப் பார்த்தால் அவரோடு எப்போதும் பெண்கள் இருப்பார்கள். பெண்களை இரு புறங்களில் மட்டுமல்லாது, அவருக்குப் பின்னாலும் பார்க்க முடியும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பின்னால் அப்படி ஒரு பெண் கூட நிற்க மாட்டார். அவர் எப்போதும் ஆண்கள் புடை சூழல் நிற்பார்” என்று பெண்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் தலைவரும் வெறுப்பவர்கள் என்று பொருள் படும் படி பேசினார்.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி “காந்தி கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் தொடர்புண்டு” என்று பேசியதற்காக அவர் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ராகுல்காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை எதிர்கொண்டு வரும் நிலையில்,
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் ராகுல்காந்தி பிரதமராகலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியிருப்பதால் ராகுலை சமாதானம் செய்யும் நோக்கில் செப்டம்பர் 17 துவங்கி 19 வரை நிகச்சி நடத்த உள்ளது. இந்த நிகழ்வுக்கு எதிர்க்கட்சி தலைவர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சித்தாராம்யெச்சூரியையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் சித்தாராம் யெச்சூரி நிச்சயம் இக்கூட்டத்தில் உறுதியாக பங்கேற்க மாட்டார். ஆனால், ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்கும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் மோகன்பகவல் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறிதான்.

#RagulwithRss #ஆர்_எஸ்_எஸ்_கூட்டத்தில்_ராகுல் #மோகன்பகவத்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*