ஒரே தேர்தல் அமித்ஷா சட்ட ஆணையத்திற்கு கடிதம்!

Kolkata: BJP National President Amit Shah flashes the victory sign as West Bengal BJP President Dilip Ghosh (R) looks on, during a public rally in Kolkata on Saturday, August 11, 2018. (PTI Photo/Swapan Mahapatra) (PTI8_11_2018_000109B)

அழகிரியால் திமுகவுக்குள் தர்மயுத்தம் நடத்த முடியுமா?

கலைஞர் சமாதியில் அழகிரி அஞ்சலி: திமுகவுக்குள் சலசலப்பு!

பாராளுமன்றம் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது கொள்கை முடிவு என்றும் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் சட்ட ஆணையத்திற்கு பாஜக தலைவர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் வெவ்வேறு மத மக்களும், வெவ்வேறு மொழி பேசும் மக்களும் பல மாநிலங்களில் வாழும் நிலையில் பாராளுமன்றத்திற்கு ஒரு தேர்தலும், சட்டமன்றங்களுக்கும் ஒரு தேர்தலுமாக தனித் தனியே தேர்தல்கள் நடந்து வருகிறது. ஆனால், இதை மாற்றி நாடாளுமன்றத்திற்கும், மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில்  தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்  வைத்தது. இந்த கோரிக்கையை இந்தியாவின் பெரும்பாலான  மாநிலங்களில் செல்வாக்குச் செலுத்தும் பிராந்தியக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  இந்நிலையில் சட்ட ஆணையத்திற்கு பாஜக  தலைவர் அமித்ஷா எழுதியுள்ள கடிதத்தில்:-

“நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில்  தேர்தல் நடத்த வேண்டும் இது எங்கள் கருத்து மட்டுமல்ல, இது நிறைவேற்ற வேண்டிய கொள்கை முடிவுமாகும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவு குறையும். அது போல ஆண்டு ம்ழுக்க நாட்டின் ஏதோ ஒரு பகுதியில்  தேர்தல் நடைபெறுவதும் தவிர்க்கப்படும்.இது நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்ற எதிர்க்கட்சிகளின் வாதம் ஆதாரமற்றது. கூட்டாட்சியை இது வலுப்படுத்தும்” என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

#ஒரே_தேர்தல்

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*