கருணாநிதிக்காக திரண்ட கூட்டம் பிரமித்துப் போனேன்:ரஜினிகாந்த்!

கலைஞர் சமாதியில் அழகிரி அஞ்சலி: திமுகவுக்குள் சலசலப்பு!

கருணாநிதிக்கு திரண்ட கூட்டத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கில் நடிகர் சங்கம் சார்பில் கருணாநிதி மறைவுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஷால், குஷ்பு உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசும் போது:-
“கருணாநிதி மறைந்த போது அவருக்காக திரண்ட கூட்டத்தைக் கண்டு பிரமித்துப் போனேன். அந்த அதிகாலையிலேயே அவளவு பெரிய கூட்டம் திரண்டு விட்டது. தமிழர்கள் நன்றியுணர்ச்சி உள்ளவர்கள் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.தமிழகத்தில் 50 ஆண்டுகளாக திமுக என்னும் இயக்கத்தை கட்டிக்காத்தவர் கலைஞர் கருணாநிதி. அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர் படத்தின் அருகில் கருணாநிதி படத்தை வைக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி.தமிழகத்தில் இனி பெரிய விழா என்றால் ஸ்டாலின் யாரை அழைக்கப் போகிறார். எத்தனையோ துரோகங்கள், வஞ்சகங்களை எதிர்கொண்டவர் கருணாநிதி, யாராக இருந்தாலும் கருணாநிதி இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர் கருணாநிதி.மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கும் விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தால் நானே போராட்டம் நடத்தியிருப்பேன். திமுக தலைவரின் இறுதிச் சடங்கின் போது ஏன் முதல்வர் வரவில்லை. இறுதி மரியாதையின் போது முதல்வர் இருக்க வேண்டாமா? “எனக் கேள்வி எழுப்பினார் ரஜினிகாந்த்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*