கருணாநிதிக்கு அஞ்சலி: மோடி வந்து சென்றதும் பாதுகாப்பை குலைத்த தமிழக அரசு!

ராஜாஜி-காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி உண்மை என்ன?

நாளை புதுச்சேரியில் ‘பெருங்கடல் வேட்டத்து’ திரையிடல்!

இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது-மனுஷ்ய புத்திரன்!

#kalaignar_karunanidhi_Updates தொலைதூரத்திலிருந்து ஒரு கடிதம்!

ஆதவன் மறைவதில்லை!

கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடல் நலம் குன்றிய கருணாநிதி 11 நாள் சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 7-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி காலில் வைக்கப்பட்ட போது கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. பல லட்சம் பேர் திரண்ட நிகழ்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு காரணமாக நெரிசல் ஏற்பட்டு சிலர் உயிரிழக்க நேர்ந்தது.
பிரதமர் மோடி வந்து செல்லும் வரை போலீசார் ஒழுங்காக பாதுகாப்பு பணிகளை செய்திருந்தார்கள். கூட்டமும் கட்டுக்குள் இருந்தது. ஆனால் மோடி வந்து சென்ற பிறகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வெகுவாக குறைக்கப்பட்டனர். இதை தொலைக்காட்சிகளும் பதிவு செய்திருக்கிறது. உடல் வைக்கப்பட்டிருந்த இடம் வரை கட்டுக்கடங்காத கூட்டம் அலை அலையாக வர போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பலரும் நெரிசலில் சிக்கினார்கள்.இந்தநிலையில், கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங். தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை என்று தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த காங். தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு தரவில்லை. ராகுல் காந்திக்கு சரியான பாதுகாப்பு அளிக்காத தமிழக காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். ராஜாஜி அரங்கத்திற்கு பொறுப்பேற்றிருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#கருணாநிதி_மரணம் #karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*