கருணாநிதியின் தியாகம் அளப்பரியது :நிதின் கட்கரி புகழாரம்!

ஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்

தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு சென்னையில் தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடந்து வருகிறது.திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில், கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.
“நெருக்கடி நிலை காலத்தில் திமுக பல்வேறு அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஜனநாயகத்திற்காக போராடியது. தாங்கள் கடைபிடித்த கொள்கைகளுக்காக திமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும், அந்த நெருக்கடிகளையும் தாங்கி ஜனநாயகத்தை பாதுகாத்ததில் கருணாநிதிக்கு பெரும் பங்கு உண்டு. ஒரு சிறந்த முற்போக்கு ஜனநாயகவாதியாக கருணாநிதி தொடர்ந்து செயல்பட்டார்.மறைந்த பிரதமர் வாஜ்பாயுடன் அவர் கொண்டிருந்த நட்பு மிக நெருக்கமானது. இருவரும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்தனர். இந்திய வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரின் மறைவுக்காக இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது கருணாநிதிக்காக மட்டுமே, இந்த சிறப்பை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அவர்களுக்கு வழங்கியது” என்றார்.

#KarunanidhiCondolenceMeeting #nithinkatkari #Dmk_leader_Staline #திமுகதலைவர்ஸ்டாலின் #தெற்கிலிருந்து_ஒரு_சூரியன் #தெற்கில்_உதிக்கும்_சூரியன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*