கலைஞருக்கு புகழஞ்சலி கூட்டம்:அமித்ஷா பங்கேற்கவில்லை!

சென்னையின் பூர்வகுடிகள் யார்?

தமிழகத்தில் வறட்சியும் தண்ணீர் பஞ்சமும் ஏற்படும் ஆபத்து !

“முக்கியமான அரசியல் ஆவணப்படம்” -ஏர் மகாராசன்

தோழர் வளர்மதி மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு வருகிற 30-ஆம் தேதி வியாழக்கிழமையன்று திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா கலந்து கொள்ள மாட்டார் என்றும். அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொள்வார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழகம் முழுக்க அவருடைய நினைவைப் போற்றும் வகையில் திமுக கலைஞருக்கு புகழஞ்சலி என்ற தலைப்பில் இலக்கியத்துறையினர், கலைத்துறையினர், அரசியல் துறையினர் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ஆம் தேதி சென்னை ஓய்.எம்.சி.ஏ அரங்கில் ‘தெற்கில் உதித்த சூரியன்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஒன்றை திமுக நடத்துகிறது. இக்கூட்டத்திற்கு இந்தியா முழுக்க உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் திமுக எதிர்ப்பாளர்கள் திமுக பாஜகவோடு நெருங்குகிறது என்கிற ரீதியில் பேசி வந்தார்கள். ஒரு தலைவரின் அஞ்சலி நிகழ்வில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்பது போல பாஜக தலைவரும் பங்கேற்கிறார் என்பதை தேர்தல் அரசியல் கூட்டணியோடு முடிச்சுப் போட்டு பலரும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில் “திமுக நடத்தும் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்க போவதில்லை என பாஜக முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், சுப்பிரமணியன் சுவாமியின் தகவல் எதுவும் உறுதியாகாத நிலையில். அமித்ஷாவுக்கு பதிலாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்காரி கலந்து கொள்வார் என்று நிதின்கட்காரி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்படும் கூட்டத்தை திமுக அரசியல் ஒத்திகை நிகழ்ச்சியாகப் பார்க்கவில்லை. ஆனால், திமுக தலைவராக ஸ்டாலின் பொருப்பேற்றுக் கொண்ட பின்னர் நடக்கும் முதல் பிரமாண்ட பொதுக்கூட்டம் என்பதால் திமுக விஷயத்தில் ஆழம் பார்க்கிறதா பாஜக என்ற விவாதங்களுக்கு இந்த செய்திகள் வழியமைத்துக் கொடுக்கிறது.

#கலைஞருக்கு_புகழஞ்சலி #தெற்கிலிருந்து_ஒரு_சூரியன் #திமுகதலைவர்கருணாநிதி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*