கலைஞர் சமாதியில் அழகிரி அஞ்சலி: திமுகவுக்குள் சலசலப்பு!

கேரளாவுக்கு திமுக ஒரு கோடி நிதி உதவி!

“அவர் இல்லாம நான் இல்லை” கலைஞரின் 50 வருட உதவியாளர் சண்முகநாதன்!

கருணாநிதிக்கு அஞ்சலி: மோடி வந்து சென்றதும் பாதுகாப்பை குலைத்த தமிழக அரசு!

‘பெருங்கடல் வேட்டத்து’ பற்றி கவிஞர் கனிமொழி ஜி !

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சமாதியில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய அவருடைய மகனும் முன்னாள் திமுக தென் மண்டல அமைப்பாளருமான அழகிரி செய்தியாளர்களுடன் பேசிய போது:-

“கட்சி தொடர்பான என் ஆதங்கத்தை தந்தையின் ஆன்மாவிடம் தெரிவித்தேன். உண்மையான திமுக விசுவாசிகள் என் பக்கமே உள்ளார்கள்” என்றார். செய்தியாளர்கள் அவரிடம் திமுக செயற்குழு பற்றி கேட்ட போது”-

“நான் திமுகவில் இல்லை. ஆகவே அது பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.என்ன ஆதங்கம் என்பது பின்னர்  தெரியவரும்” என்றார்.

வழக்கமாக ஊடகங்களை தவிர்க்கும் அழகிரி இன்று ஊடகங்களை அழைத்து பிரஸ் மிட் போல பேசினார். மேலும் திமுகவில் ஒரு சலசலப்பை உருவாக்கும் நோக்கத்துடன் பேசியதாகவும் தெரிகிறது.

ஆனால், அழகிரிக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அழகிரியை நீக்கிய  நிலையில், அவருடன் இருந்த ஆதரவாளர்கள் பலரும் ஸ்டாலின் பக்கம் இணைந்து விட்ட நிலையில், திமுகவின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கம் இருப்பதாக கூறுவது. திமுகவுக்குள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

#கலைஞர்_உதவியாளர்_சண்முகநாதன் #சண்முகநாதன் #கருணாநிதி_மரணம் #karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

ராஜாஜி-காமராஜருக்கு மெரினாவில் இடம் மறுத்தாரா கருணாநிதி உண்மை என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*