கலைஞர் சிலை மெரினாவில் வைக்க அனுமதியில்லை :திருப்பி அனுப்பப்பட்டது!

மோடியை தழுவியதை என் கட்சியினரே விரும்பவில்லை -ராகுல்காந்தி!

திமுகவில் தொலைந்து போனவர் அழகிரி :அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

குல்தீப் நய்யார் -1923-1918 வாழ்வும்-மரணமும்!

கேரளம் நாசா வெளியிட்ட அதிர்ச்சி ஆய்வு!

தமிழகத்தில் பாம்பு மாத்திரை போதையை பரப்பும் வட மாநில கும்பல்!

கலைஞரின் இரண்டு சிலைகளை திமுக தலைவர்கள் ஆந்திராவில் செய்து கொண்டு வந்து சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில் வைத்த நிலையில், போலீசார் அந்த சிலைகளை அகற்றியதோடு அவைகளை திருப்பி அனுப்பி விட்டதால் கருணாநிதியின் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.
கடந்த 7-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சென்னை மெரினா நினைவிடத்தில் அண்ணா நினைவகம் அருகில் அடக்கம் செய்யப்பட்டார். அவரை அங்கு அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது தமிழக அரசு. பெரும் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கும் நோக்குடனும், கருணாநிதியின் உடலை அவமதிக்கும் நோக்குடனும் எடப்பாடி பழனிசாமி அரசு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரவோடு இரவாக நீதிமன்றத்தை நாடி போராடி,வாதாடி நீதிமன்றத்தின் மூலம் கலைஞரை மெரினாவின் அண்ணாவின் காலடியில் அடக்கம் செய்ய அனுமதி பெற்றது திமுக.
பல லட்சம் பேர் திரண்டு கலைஞருக்கு பிரியாவிடை கொடுத்ததை ஆளும் அதிமுக அரசு எதிர்பார்க்கவில்லை. உடல் அடக்கம் முடிந்த பின்னரும் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அன்றாடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்திச் செல்கிறார்கள். ஆனால் அவருடைய சமாதிக்கு அருகில் மக்கள் வந்து செல்ல ஏதுவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் செய்தது போன்று எந்த ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்யவில்லை.
இந்நிலையில், கலைஞர் மீது பேரன்பு கொண்ட திமுகவினர் பலரும் கலைஞருக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரா ராவ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் கலைஞருக்கு சிலைகள் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டு அதன்படி சிலைகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகளை தமிழகம் முழுக்க வைக்க திமுகவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
அதில், இரு சிலைகளை மட்டும் கலைஞரின் சமாதியில் வைக்க முடிவு செய்து அங்கு கொண்டு சென்று வைக்கவும் செய்தனர். பொதுமக்களும் அந்த சிலையோடு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதோடு மாலைகளையும் அதற்கு அணிவித்து வந்த நிலையில், போலீசார் உரிய அனுமதியின்றி சிலைகள் வைக்க அனுமதியில்லை என்று அச்சிலைகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டனர். திமுகவினரும் பிரச்சனை பண்ண வேண்டாம். நீதிமன்றம் மூலம் பார்த்துக் கொள்ளலாம் என்று அச்சிலைகளை எடுத்துச் சென்றனர்.மீண்டும் அதே இடத்தில் சிலைகள் உரிய அனுமதியோடு நிறுவப்படும் என்கிறது திமுக தரப்பு.

#karunanidhi #கலைஞர்_சிலைகள் #மெரினாவில்_கருணாநிதிக்கு சிலை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*