கல்லறை மூடப்பட்ட பின்னர் பெய்த மெரினா மழை!

இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது-மனுஷ்ய புத்திரன்!

#kalaignar_karunanidhi_Updates தொலைதூரத்திலிருந்து ஒரு கடிதம்!

ஆதவன் மறைவதில்லை!

11 நாள் சிகிச்சை பலனின்றி  நேற்று (07-08-2018)ன் அன்று காலமான கலைஞர் மு.கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் பின்புறத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மதச்சடங்குகள் எதுவும் இன்றி அரசு மரியாதையுடன் உடன்பிறப்புகளும், உறவுகளும் கலைஞருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

பின்னர் சந்தனப்பேழைக்குள்  வைக்கப்பட்ட கலைஞரின் உடல் குழிக்குள் இறக்கப்பட்ட பின்னர் அதன் மீது  காங்கிரீட் கிராதிகள் கொண்டு மூடப்பட்டது. பல ஆயிரம் தொண்டர்கள் விடிய விடிய அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு நின்ற போது. கிராதிகளால் மூடப்பட்ட பின்னர் சோ வென அடித்துப் பெய்த மழை கலைஞருக்காக ஒரு முறை கண்ணீர் விட்டது.

#கருணாநிதி_மரணம் #karunanidhi_passed #Karunanidhi_dead#கலைஞர்_மு_கருணாநிதி #Kauvery_Hospital#Karunanidhi_in_kauvery_Hospital #tamil_news #Tn_politics #தமிழ்_செய்திகள் #தமிழகச்செய்திகள் #அண்ணா_சமாதி#Anna_square

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*