“காவல்துறை மீதே மாநில அரசுக்கு நம்பிக்கையில்லையா?” -நீதிமன்றம் கேள்வி!

ஆதார் எண்ணை பொதுவெளியில் பகிர வேண்டாம் : ஆதார் முகமை வேண்டுகோள்!

பொது சிவில் சட்டத்திற்கு முஸ்லீம் வாரியம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது!

சோனியாவை சிக்க வைக்க சிபிஐ நடத்திய பேரம் அம்பலம்!

தன் வீட்டிற்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர்!

கலைஞர் சிகிச்சை : வெளிப்படை தன்மையை கடைபிடிக்கும் திமுக:புதிய படம் வெளியீடு!
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் விசாரணையின் மீது தமிழக அரசு நம்பிக்கையில்லை என்று தெரிவித்ததோடு, வழக்குகளை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை அந்த பணியில் இருந்து விடுவித்தது தமிழக அரசு. இது தொடர்பான வழக்கு இன்று சென்னை ”உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர். ”சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அது தொடர்பான விபரங்களை தமிழக அரசுக்கு தர மறுக்கிறது.எனவே இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.” என்று கூற, இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் “மாநில அரசின் கீழ் இருக்கும் காவல்துறையின் மீதே தமிழக அரசுக்கு நம்பிக்கையில்லையா? என்று கேட்டு வழக்கை செப்டர்ம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள். ஏற்கனவே சிலை கடத்தல் தொடர்பாக ரகசிய ஆவணங்கள் அடக்கிய 40-க்கும் மேற்பட்ட சிடிக்கள் காணாமல் போனது குறிப்பிடத்தது.

#சிலைகடத்தல் #சிலைகடத்தல்மன்னன்_தீனதயாளன் #பொன்_மாணிக்கவேல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*