குல்தீப் நய்யார் -1923-1918 வாழ்வும்-மரணமும்!

வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி!

மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான குல்தீப் நய்யார் டெல்லியில் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 95.
ஈழப் பிரச்சனைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த குல்தீப். 2009 ஈழப் போரின் முடிவில் இந்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை வைத்தவர்.
குல்தீப் பாகிஸ்தானின் பஞ்சாப் அருகே உள்ள சியால்கோட்டில் 14 ஆகஸ்ட் 1923ல் பிறந்தார். அதன்பின் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார்.குல்தீப் உருது பத்திரிக்கையாளராக சிறுவயதில் தன் பணியைத் துவங்கியவர். இவர் சட்டம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இடதுசாரி பார்வையாளரான இவர், கவனிக்கப்பட வேண்டிய நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார்.
குல்தீப் மொத்தம் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் அவர் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து எழுதியதும், நேருவின் அரசியல் குறித்து எழுதியதும், கார்கில் போர் குறித்து எழுதியதும் மிக முக்கியமான புத்தகங்களாக பார்க்கப்படுகிறது.
‘நேருவுக்குப் பிறகு இந்தியா’ ‘எல்லைகளுக்கு இடையே’, ‘தூரத்து உறவினர்கள் : துணைக் கண்டத்தின் கதை’ ஆகிய புத்தகங்கள் பெரிய புயலை கிளப்பியது. அதுமட்டும் இல்லாமல் பத்திரிக்கைகளில் இவர் எழுதி வந்த தொடர்களும் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.குல்தீப் நய்யார் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அதேபோல் ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வயோதிகம் காரணமாக, இன்று காலை அவர் மரணம்.அடைந்தார். அவரது உடல் டெல்லியில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

#kuldeep_nayyar #kuldeepnayyar_death #Rip_kuldeep_nayyar #குல்தீப்நய்யார் #குல்தீப்நய்யார்_அஞ்சலி

#KeralaFloods 700 கோடி அமீரகத்தின் உதவியை மறுக்கிறதா மத்திய அரசு!

அழகிரியின் நோக்கம்தான் என்ன?

திமுக இல்லாமல் திமுக பற்றி விவாதித்த புதிய தலைமுறை!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி அருணா ஜெகதீசன்!

புலிகளை அழிக்க வாஜ்பாய் உதவினார் – ரணில் விக்கிரமசிங்கே!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*