கேரளம் நாசா வெளியிட்ட அதிர்ச்சி ஆய்வு!

தமிழகத்தில் பாம்பு மாத்திரை போதையை பரப்பும் வட மாநில கும்பல்!

வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி!

மேற்கு  தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கேரள மாநிலம். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டமும், ஆரல்வாய் மொழி துவங்கி கேரள எல்லையான பாரசாலா வரை மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில்தான் உள்ளது. வடப்பக்கம் மேற்கு தொடர்ச்சி மலையும், தெற்கே அரபுக்கடல், இலங்கை, லட்சத்தீவுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் இருப்பதால் பெரும்பாலும் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்கு இந்த நிலப்பகுதி பெரிதும் பாதிக்கப்படுவதில்லை என்ற ஒரு பார்வையும் இந்த புவியியல் ரீதியாக இந்த பகுதிகளைப் பற்றி உண்டு.

இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக நிலவும் தட்ப வெப்ப நிலையையும், இயற்கை மாறுபாடுகளையும் அமெரிக்காவின் நாசா ஆய்வு செய்து வந்தது.  கடந்த 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிவரை கன மழை  பெயததாக நாசாவின் இரண்டு செயற்கைக் கோள்கள் அனுப்பிய தகவல்கள் தெரிவித்த நிலையில், நாசா ஆய்வகம் அதில் தன் கவனத்தை செலுத்தியது.

நாசா இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பெய்த மழை வடக்கு தீபகற்பம் வரை அடர்த்தியாக பெய்ததை பதிவு செய்திருக்கிறது. இந்திய தீபகற்பத்தின் மேற்கு பாதியில் இருந்து வங்க கடலின் கிழக்கு பாதிவரை  ஒரு  வார காலத்திற்கு 5 இன்சிலிருந்து 14 இன்ச் அடர்த்தியான அளவுக்கு மழை பெய்துள்ளது. இது வழக்கமான பருமழைதான்.

ஆனால், தென்மேற்கு கடலோர பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பக்டுஹிகளில் 18.5 இன்ச் அளவ்க்கு மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட மிக அதிகமானது. இந்திய மேற்கு கடலோர பகுதியுடன் இணைந்து மேற்கு தொடர்ச்சி மலைகளும் நல்ல மழையை பெற்றன.

ஏனெனில் தென்மேற்கு பருவமழை சுழற்சியின் ஒரு பகுதியாக வடக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகியவற்றிலிருந்து திரும்பி வரும் ஈரக்காற்றை மேற்கு தொடர்ச்சி மலைகள் மறித்து கொண்டன. இந்த தகவல்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எடுக்கப்பட்டது என்று நாசா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

 

#நாசா #Nasa #கேரள_வெள்ளம் #KeralaFloods

#KeralaFloods 700 கோடி அமீரகத்தின் உதவியை மறுக்கிறதா மத்திய அரசு!

அழகிரியின் நோக்கம்தான் என்ன?

திமுக இல்லாமல் திமுக பற்றி விவாதித்த புதிய தலைமுறை!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி அருணா ஜெகதீசன்!

புலிகளை அழிக்க வாஜ்பாய் உதவினார் – ரணில் விக்கிரமசிங்கே!

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*