#சமூகநீதி :கமிஷன் – கலெக்‌ஷன் ஸ்டாலின் எச்சரிக்கை!

முக்கொம்பு மதகுகள் உடைந்தன:மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கேரளாவுக்கு 70 லட்சம் நிதி அளித்து அசத்திய விஜய்!

#KeralaFloods அரிசிக்கு கொடுத்த 233 கோடியை திரும்ப வசூலிக்கும் மத்திய அரசு!

அழகிரியின் நோக்கம்தான் என்ன?

69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாத, சமூக நீதிக்கு எதிரான ஆதிக்க சக்திகள் மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. பலமுறை உச்சநீதிமன்றம் இது தொடர்பான மனுக்களை நிராகரித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தும், அதை ஏற்றுக்கொள்ளும் மனமின்றி, ஏதாவது ஒரு காரணத்தைப் புதிது புதிதாகக் கண்டுபிடித்து வழக்குத் தொடரும் போக்கு காலநடையில் அதிகரித்து வருகிறது.

ஆகவே, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் இந்த வழக்கில், தமிழ்நாடு அ.தி.மு.க அரசு, கமிஷன்-கலெக்‌ஷன் என்ற முழுநேரத் தொழிலிலிருந்து சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டாவது, இட ஒதுக்கீடு- சமூகநீதி என்பது தமிழகத்தின் உயிராதாரப் பிரச்சினை என்பதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, “இட ஒதுக்கீடு” தலைப்பில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி, திறமையாகவும் வலிமையாகவும் வாதிட்டு, 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எள்ளளவும் இடையூறும் ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டும்.

நீட், ஸ்டெர்லைட் போன்ற பல பிரச்சினைகளில், எதிர்க்கட்சியினரின் எச்சரிக்கை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சொதப்பியதைப்போல, அ.தி.மு.க அரசு இட ஒதுக்கீடு பிரச்சினையிலும் குழப்பமான அணுகுமுறையை மேற்கொள்ளுமானால், வரலாறு மன்னிக்காது என்பதை உணர்ந்து, மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

#சமூகநீதி #இடஒதுக்கீடு #திமுக #திராவிடநாடு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*