சுகப்பிரசவம் ஹீலர் பாஸ்கர் போலீஸ் வளையத்தில்: இவர்கள் எதை பணமாக்குகிறார்கள்?

ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்!

நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி!

ரஜினியுடன் தன்னை பொருத்தமற்று ஒப்பிட வேண்டாம் : கமல்!

நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது-மத்திய அமைச்சர்!

மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவும் இல்லாமல் சுகப்பிரசவம் என்ற விளம்பரத்துடன் நிஷ்டை என்ற அமைப்பு  பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்த நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ள காவல்துறை நிஷ்டை அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். அவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிகிறது.

மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் இல்லாமல் சுகப்பிரசவம் என்பதே அலோபதி மருத்துவத்தின் மீது அவநம்பிக்கையையும் இதற்கு மாற்றாக இயற்கை மருத்துவம் என்ற போலியான  பிரச்சாரத்தை வைத்து கர்ப்பிணிகளை ஈர்க்கிறது. நவீன மருத்துவத்தின் மீது அனைவருக்குமே அதிருப்தி உள்ளது. பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்றால் சிசேரியன் சிகிச்சை என்று  ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய்  வரை வசூலிக்கிறார்கள். இந்த அதிருப்தியை காசாக்க  மூட நம்பிக்கையை இவர்கள் விதைக்கிறார்கள்.

ஆனால், இதில் உள்ள சிக்கலே வீட்டில் பிரசவம் பார்ப்பதை சட்டம் தடை செய்யவில்லை. பாரம்பரிய பிரசவ முறை இது. ஆனால், வீட்டில் பிரசவிக்கும் பழக்கம்  இன்று இல்லை. லட்சக்கணக்கில் ஒரு சிலரே இந்த மருத்துவத்தை செய்கிறார்கள். பிரசவ மருத்துவம் வளர்ச்சியடைவதற்கு முன்பு வீட்டில் வைத்து செய்யப்பட்ட பிரசவங்களில் மரணங்களே அதிகம். நவீன மருத்துவத்தின் மூலம் பிரசவங்கள் பார்க்கப்பட்டவை மரணங்களைக் குறைத்த நிலையில்தான், இவர்கள் மீண்டும் மரபு, இயற்கை மருத்துவம் என்னும் பெயரில் பழைய கற்காலத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.

மக்கள் அலோபதி மருத்துவத்தின் மீதுள்ள அதிருப்தியால் இம்மாதிரியான கவர்ச்சிகரமான பிரச்சாரங்களுக்கு பலியாகிறார்கள்.

#சுகப்பிரசவம் #நவீனமருத்துவம் #இயற்கை_மருத்துவம் #ஹீலர்பாஸ்கர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*