”ஜெயக்குமார் இருக்கணும் அல்லது நான் இருக்கணும்” – சீறும் மதுசூதனன்!

பெருங்கடல்வேட்டத்து பற்றி அம்பிகா குமரன்!

நதிகள் வீணாய்க் கடலில் கலக்கின்றன?- வரீதய்யா

ஆர்.எஸ்.எஸ் அழைப்பை ஏற்பாரா ராகுல்காந்தி?

கலைஞருக்கு புகழஞ்சலி கூட்டம்:அமித்ஷா பங்கேற்கவில்லை!

சென்னையின் பூர்வகுடிகள் யார்?

ஜெயலலிதா இருந்தவரை அடக்கி வாசித்த அதிமுகவினர் அனைவருமே இப்போது ஆளுக்கொரு கோஷ்டியில் அடைக்கலமாகி விட்டார்கள். கோஷ்டி மோதலுக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு கோஷ்டி மோதல் உச்சத்தில் இருக்கிறது அதிமுகவில். ஒபிஎஸ்-இபிஎஸ் அணிகளில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் மதுசூதனன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
அமைச்சர் ஜெயக்குமாருக்கும் மதுசூதனனுக்கும் ஏழாம் பொருத்தம். ஆர்.கே.நகரில் போட்டியிட்டு மதுசூதனன் தோல்வியடைய அமைச்சர் ஜெயக்குமாரே காரணம். அவர் சார்ந்த மீனவர்களின் வாக்குகள் தனக்குக் கிடைக்காமல் தடுத்து விட்டார் ஜெயக்குமார் என்று தன் தோல்விக்கு ஜெயக்குமார்தான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்த புகாரின் மீது ஒரு நடவடிக்கையும் இல்லாத நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக வலம் வருகிறார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனுக்கும், அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையிலான மோதல்தான் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் பிரதிபலித்தது. மீனவர்கள் அடர்த்தியாக வாழும் ராயபுரம் கூட்டுறவு சங்க தேர்தலில் மதுசூதனன் ஆதரவாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய அது நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் ஜெயக்குமார் உள்ளார் என்பது மதுசூதனின் குற்றச்சாட்டு. தங்களுக்கு இருக்கும் ஒரே கோட்டையான மீனவர் பகுதிகளை எப்படி மதுசூதனனுக்கு விட்டுக் கொடுக்க முடியும் என்பது ஜெயக்குமார் ஆதரவாளர்களின் வாதம்.
இதில் எடப்பாடி பழனிசாமி ஜெயக்குமார் தரப்பு வாதங்களை புரிந்து கொள்கிறார். பன்னீரோ மதுசூதனனை எடப்பாடியார் மீது ஏவுகிறார். இடையில் நுழைந்த தினகரன் அணியோ மதுசூதனனை தங்கள் பக்கம் இழுக்க வலை வீசியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்த மதுசூதனன் “ஒன்றிலோ ஜெயக்குமார் இருக்கட்டும் அல்லது நான் இருக்கிறேன்.இருவரும் இனி ஒரே கட்சியில் இருக்க முடியாது” என்றிருக்கிறார். கட்சி இருக்கும் நிலையில் மதுவுக்காக ஜெயக்குமாரை இழக்க எடப்பாடி விரும்பமாட்டார் என்பதால் விரைவில் மதுசூதனன் வேறு முடிவுகள் எடுப்பார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

#அதிமுகவில்_கோஷ்டிமோதல் #மதுசூதனன்_ஜெயக்குமார்_மோதல் #மது_ஜெயக்குமார்_மோதல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*