தமிழகத்தில் பாம்பு மாத்திரை போதையை பரப்பும் வட மாநில கும்பல்!

#KeralaFloods 700 கோடி அமீரகத்தின் உதவியை மறுக்கிறதா மத்திய அரசு!

அழகிரியின் நோக்கம்தான் என்ன?

திமுக இல்லாமல் திமுக பற்றி விவாதித்த புதிய தலைமுறை!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி அருணா ஜெகதீசன்!

புலிகளை அழிக்க வாஜ்பாய் உதவினார் – ரணில் விக்கிரமசிங்கே!

தமிழகத்தில் பாம்பு போதையை வட மாநில கும்பல் ஒன்று பரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் உள்ளார்கள். இவர்கள் கட்டுமான தொழிலுக்காகவும், பல்வேறு பணிகளுக்காகவும் வரும் நிலையில், பான்,குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பெருமளவு விற்பனை செய்கிறவர்கள் வட மாநில இளைஞர்கள்தான். இப்போது இந்த இடத்தில் புதிதாக வந்திருப்பது பாம்பு போதை பொடி.
திருவண்ணாமலை விசிறி சாமியார் ஆசிரமம் அருகில் ஒரு அப்பார்மெண்டில் தங்கியிருந்த ரஷ்யா பெண் அலினா கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அலினா தங்கியிருந்த விடுதி உரிமையாளர் பாரது அவருடைய அண்ணன் நீல கண்டன், மணிகண்டன் வெங்கடேசன் ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர். பாலியல் வன்முறைக்குள்ளான அலினா மயக்க நிலையில்தான் மீட்கப்பட்டார். அவரை போலீசார் விசாரித்த போது வட மாநிலங்களுக்குச் சென்று பாம்பு போதை பொருளை அவர் பயன்படுத்தியது தெரியவர. வழக்கமாக பாம்பு போதை என்பது பாம்பை நாக்கில் கொத்த விடும் ராஜ போதையே புழக்கத்தில் இருந்தது.
ஆனால், அலினா பொடி போன்ற ஒன்றை பயன்படுத்தியிருப்பதும், அவருக்கும் போதை பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருந்ததா என்றும் விசாரிக்க, பாம்பு விஷயத்தில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் பொடி விற்பனை செய்யும் வட மாநில கும்பல் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்திருக்கிறது.
ஐடி துறையினரையும் வார இறுதி பார்ட்டிகளில் ஆடுகிறவர்களையும் குறிவைத்து கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் போதை பொருள் விற்பனை செய்து வந்த உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகில் திவாரி என்பவரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் கைப்பற்றப்பட்டுள்ள போதை வஸ்துகள் சந்தையில் புதியவை. பாம்பு விஷத்தில் இருந்து தயாரிக்கப்பட்டதாக சந்தேகப்படும் மாத்திரைகள் பொடிகள் கைப்பற்றப்பட்டு அவைகள் சோதனைக்கு அனுப்பட்டுள்ளன.
பாம்பு போதை மாத்திரை, அல்லது பொடியை உண்டால் 7 மணி நேரம் முதல் மூன்று நாட்கள் வரை போதையில் இருக்கலாமாம். இந்த போதை வணிகத்தின் பின்னார் வட இந்திய கும்பல் ஒன்றும் இருப்பது தொடர்பாக தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

#பாம்பு_விஷம் #பாம்புபோதை #ராஜநாகபோதை #வடமாநிலபோதைகும்பல்

#KeralaFloods 700 கோடி நிதி கொடுத்தது ஐக்கிய அமீரகம்!

திமுக இல்லாமல் திமுக பற்றி விவாதித்த புதிய தலைமுறை!

அழகிரியின் நோக்கம்தான் என்ன?

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பலியானவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பிய நீதிபதி அருணா ஜெகதீசன்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*