தமிழர் பழமை என்ற பெயரில் மூட மருத்துவம்-நலங்கிள்ளி!

2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : கலைக்க நீதிமன்றம் உத்தரவு!

திமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்?

சுகப்பிரசவம் ஹீலர் பாஸ்கர் போலீஸ் வளையத்தில்: இவர்கள் எதை பணமாக்குகிறார்கள்?

ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்!

நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி!

ரஜினியுடன் தன்னை பொருத்தமற்று ஒப்பிட வேண்டாம் : கமல்!

நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது-மத்திய அமைச்சர்!

பகுதி – 1

மருந்து மாத்திரைகள் ஸ்கேனிங் தடுப்பூசி மருத்துவர் இல்லாமல் மகப்பேறு நடத்த நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி முகாம் நடக்கிறதாம். இதற்கு உடனடியாகக் காவல்துறையிடம் தடை கோரியுள்ள மனிதி அமைப்புக்கும் Selvi Mano அவர்களுக்கும் ஆயிரம் பாராட்டு. தமிழ் சித்தா ஆயுர்வேதம் என்ற பெயர்களில் பெரும் மருத்துவப் பேராபத்து தமிழ் நாட்டைச் சூழ்ந்துள்ளது. முதன் முதலில் நான் அதிர்ச்சியடைந்தது அப்பா படத்தில் சமுத்திரக்கனி அவர் மனைவிக்குச் செய்யும் மகப்பேறு. அடுத்துதான் இப்படிப்பட் முயற்சிகளைத் தொடர்ந்து படித்தேன். பிறகு சென்ற வாரம் இதே பாணியில் திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியை கிருத்திகாவை அவர் கணவர் கொன்றார். இவர் சமுத்திரக்கனியை விட இன்னும் பெரிய கில்லாடி போலும்! நவீன யூடியூப் பார்த்துக் கொண்டே மகப்பேறு மருத்துவம்! ஆகா, இதுதான் நவீனமா?

இந்தக் கொடூர மகப்பேறு முயற்சி குறித்து அன்றைய நாள் நடைபெற்ற நியூஸ் 18 காலத்தின் குரல் விவாதம் எனக்கு அடுத்த அதிர்ச்சி. அந்நிகழ்ச்சியில் தோழர் கி. வெங்கட்ராமனும் இயற்கை மருத்துவ ஆர்வலர் கலாநிதியும் வீட்டு மகப்பேறு மகத்துவங்களைப் போற்றிப் பாராட்டினர். நவீன மகப்பேறு மருத்துவமே குப்பை என்பது போல் பேசினர். மருத்துவர் எழிலன் மிகச் சிறப்பாக மருத்துவ அறிவியல் அடிப்படையில் வீட்டு மகப்பேறு சிகிச்சையின் ஆபத்துகளை விளக்கினார். ஏன், மருத்துவரே கூட வீட்டில் மகப்பேறு செய்ய முடியாது, கூடாது. ஏனென்றால் மகப்பேற்றின் போது குருதிப் போக்கு மிகுதியாகும் போது புதிதாகப் பெண்ணுக்குக் குருதி ஏற்ற வேண்டும். குழந்தை தலைகீழானால், கொடி சுற்றினால் ஏற்படும் ஆபத்தான சூழலை வீட்டில் கடக்கவே முடியாது என அற்புதமாக வாதிட்டார். இதனால்தான் ஒரு காலத்தில் மறுபிறவி என்றறியப்பட்ட மகப்பேறு இன்றைய வாழ்வின் இயல்பான நிகழ்வாகி விட்டது எனப் புள்ளிவிவரங்களுடன் பேசினார்.

இந்த வாதத்தை மறுத்த கி. வெங்கட்ராமனும் கலாநிதியும் இந்தப் புள்ளிவிவரங்களே பிழையானவை என ஒரு போடு போட்டனர். அந்தக் காலங்களில் பிரித்தானியர் எடுத்த புள்ளி விவரங்களே சதியாம். அப்படியானால் உலகெங்கும் எடுத்த புள்ளி விவரங்களின் படியும் மகப்பேற்று இறப்பு குறைந்துதானே போயுள்ளது என்றால், அதுவும் பொய்யாம். இவர்களிடம் ஏதாவது மாற்றுப் புள்ளிவிவரம் இருக்கிறதா பார்த்தால், அதுவும் இல்லை. அறிவியலே வர்க்கம் சார்ந்தது என்னும் அளவுக்குப் போய் விட்டார் கி. வெ. அறிவியலில் ஏது இடதுசாரி, வலதுசாரி எல்லாம்.

மருத்துவம் வணிகமானதைக் கி.வெ. இப்படிக் குறிக்கிறார் என்றால், இன்று இயற்கை மருத்துவந்தான் பகல் கொள்ளையாக இருக்கிறது. மொத்தம் எட்டாண்டு வரை மகப்பேறு மருத்துவத்துக்குச் செலவழிக்கும் மருத்துவர் வாங்கும் தொகை என்ன? இந்த இயற்கை மருத்துவப் பேர்வழிகள் கொள்ளையடிக்கும் பணம் என்ன? மருத்துவத்தில் வணிகமயத்தைத் தடுக்கச் சொல்லுங்கள். அதை விடுத்து அறிவியலையே புறக்கணிக்கச் சொன்னால் இந்தத் தமிழ்ச் சமூகம் உருப்படுமா?

இது அப்பட்டமான ஆணாதிக்கம். பெண்ணின் உரிமையை தமிழர் பழம் பெருமை பேசி பறிக்கின்றனர். அந்தக் கணவர் அவராகவே மகப்பேறு செய்ய இறங்குமுன், கிருத்திகாவின் இசைவு கேட்டாரா இல்லையா என்று யார் அறிவது? இசைவு பெற்றுத்தான் செய்தததாகக் கூறுகிறார் கலாநிதி. சரி, அனுமதிக் கடிதம் மனைவியிடம் வாங்கி வைப்பதற்காகவே கொள்வோம், இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் மனைவியிடம் கடிதம் வாங்குவதா பெரிது?

இன்னொரு புத்திசாலித்தனமான கேள்வி. ஏன் எல்லாப் பிள்ளைத்தாய்ச்சிகளுக்குமா ஆபத்து வரப் போகிறது? பிறகேன் எல்லோரையும் மருத்துவமனை வரச் சொல்கிறீர்கள். இவர்கள் சோதிட மையம் ஏதும் நடத்துகிறீர்களா என்ற ஐயமே எனக்கு வந்தது. ஸ்கேன் செய்யக் கூடாதாம். பிறகெப்படி கருப்பையில் மிதக்கும் குழந்தைக்கு வரவிருக்கும் ஆபத்தைக் கணிப்பார்களாம். கடவுளுக்கே வெளிச்சம்!

தொடரும்…

#தமிழர்_மருத்துவம் #இயற்கைமருத்துவம் #அலோபதி #ஆயுவேதம் #இயற்கைவைத்தியம் #சுகப்பிரசம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*