திமுகவில் தொலைந்து போனவர் அழகிரி :அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

குல்தீப் நய்யார் -1923-1918 வாழ்வும்-மரணமும்!

#சமூகநீதி :கமிஷன் – கலெக்‌ஷன் ஸ்டாலின் எச்சரிக்கை!

வாஜ்பாய் அஸ்திக்கு ஸ்டாலின் அஞ்சலி!

திமுகவில் அடைக்கப்பட்ட கதவுகளை திறக்கவே அழகிரி போராடிக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
அழகிரி என்றாலே அனைவரிடமும் ஒரு அச்சம் உண்டு. அதிமுகவினர் மட்டுமல்லாது இவரால் பாதிக்கப்பட்ட திமுகவினரும் உண்டு. அவ்வளவு அச்சத்தை விதைத்து மதுரையில் கோலோச்சிக் கொண்டிருந்தவரால் திமுகவுக்கு கிடைத்த நன்மைகளை விட அவப்பெயர்களே அதிகம். என்னும் நிலையில், 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி அழகிரியை நீக்கினார்.
இப்போது அவர் யாருடைய நிழலில் இருக்கிறார் என்பது விவாதமாகிக் கொண்டிருக்கும் நிலையில் , அதிமுக அமைச்சர் உதயகுமார் அழகிரி பற்றி பேசியிருக்கிறார்:-
“ அழகிரி திமுகவிலெயே தொலைந்து போனவர், மீண்டும் கதவு திறக்க வேண்டும் என்று தட்டிக் கொண்டிருக்கிறார். இதே அழகிரி 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்றார். அவர்தான் திமுகவில் காணாமல் போய் விட்டார்.அவர் உருவாக்கிய திருமங்கலம் பார்முலாவும் காணாமல் போய்விட்டது. மேடைக்கு ஏற்ற மாதிரி ஆட்டம் போடுகிறார் ரஜினி. அதனால்தான் கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் முதல்வரை விமர்சித்ததோடு, எம்.ஜி.ஆர் கருணாநிதி படங்களை ஒரே மேடையில் வைக்க வேண்டும் என்று கூறினார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நாங்கள் வெல்வோம்” என்றார் அமைச்சர்.

#அமைச்சர்-உதயகுமார் #அதிமுக_திமுக #அண்ணாஅறிவாலயம் #அழகிரி #ஸ்டாலின்

முக்கொம்பு மதகுகள் உடைந்தன:மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கேரளாவுக்கு 70 லட்சம் நிதி அளித்து அசத்திய விஜய்!

#KeralaFloods அரிசிக்கு கொடுத்த 233 கோடியை திரும்ப வசூலிக்கும் மத்திய அரசு!

அழகிரியின் நோக்கம்தான் என்ன?

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*