திமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்?

2 கோடிக்கு மிக்சர் சாப்பிட்ட ரகுபதி ஆணையம் : கலைக்க நீதிமன்றம் உத்தரவு!

திமுகவை வீழ்த்த ஸ்லீப்பர் செல்கள்?

சுகப்பிரசவம் ஹீலர் பாஸ்கர் போலீஸ் வளையத்தில்: இவர்கள் எதை பணமாக்குகிறார்கள்?

இன்றைய தேதியில் உள்ளாட்சி தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ நடந்து அது நேர்மையாக நடந்தால் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் சூழல் தமிழகத்தில் உள்ளதாக திமுகவின் எதிரிகளே கணிக்கிறார்கள். இது கருத்துக்கணிப்புகள், கருத்துத் திணிப்புகள் சொல்லி யாரும் தெரிய வேண்டியதில்லை. ஆனால், மிருக பலத்தோடு தன் மொத்த பலத்தையும் திரட்டி வென்றாக வேண்டிய நெருக்கடி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது ஒரு அழுத்தமாக உருவாகி இருக்கிறது.

காரணம் திமுகவுக்கு பரம்பரை எதிரிகள் உண்டு. இந்த பரம்பரை எதிரிகளுடன் சில புதிய எதிரிகளும் கைகோர்த்து அதிருப்தி வாக்குகளை சிதறிடித்து திமுகவை தோற்கடிக்க திட்டம் தீட்டுகிறார்கள். இருமாப்பாக இருந்தால் அதன் விளைவுகள் மோசமான அனுபவங்களைக் கொடுத்து விடும் சூழல் இதனுள் இருக்கிறது.

திமுகவை எதிர்ப்பவர்கள் யார்?

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் கருணாநிதி சாக வேண்டும். என்று சமூக வலைத்தளங்களில் பலரும் எழுதினார்கள். இப்படி எழுதியவர்களை கூர்ந்து கவனித்தால் சில நூறு பேர்தான். கலைஞர் நலம் பெற வேண்டும் என எழுதியவர்களே அதிகம். ஆனால் கலைஞர் நலம் பெற வேண்டும் என்ற கருத்து விவாதத்திற்குரியது அல்ல அது திமுகவினர், திமுக ஆதரவாளர்கள், கலைஞர் மீது ப்ரியம் கொண்டவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என எண்ணிலடங்காதவர்கள் கலைஞர் நலம் பெற வாழ்த்தினார்கள். என்றாலும், நாம் தமிழர் உள்ளிட்ட சில தமிழ் அடிப்படைவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கருணாநிதியை நரகாசுரன் போல சித்தரித்து அவரது சுகவீனத்தை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

இவர்களை தனித்துப் பிரித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் எப்போதும் திமுகவையோ, தந்தை பெரியாரையோ, அல்லது திராவிட இயக்கத்தவர்களையோ ஆதரித்தவர்கள் அல்ல எப்போதுமே கருணாநிதியை தெலுங்கர் என்றும், சாதி ரீதியாகவும் மொழி ரீதியாகவும் இழிவுபடுத்தி மட்டுமே எழுதி வந்தவர்கள். பெரியாரை மட்டும் இவர்கள் ஆதரித்தார்களா என்ன எப்போதுமே ஆதரித்ததில்லை. ஏதோ 2009- ஈழப் போருக்கு முன்னர் இவர்கள் திமுகவையும், திராவிட இயக்கத்தையும் ஆதரித்தது போலும், அதன் பின்னரே திமுகவை இவர்கள் விமர்சிப்பது போன்றும் நீங்கள் நம்பினால் அது முட்டாள் தனம். அவர்கள் எப்போதும் அவர்களாகவே இருக்கிறார்கள்.
திமுக மீது திவீர பெரியார் தொண்டர்கள் விமர்சனங்கள் வைத்த போதிலும் எப்போதுமே அது பெரியாருக்கும் கருணாநிதிக்கும் இடையில் இருந்த அரசியல் விமர்சனம் போன்ற ஒன்றுதான். பாதை மாறிச் சென்றதில்லை.
இந்த சிக்கல்களில் இருந்து சமூக வலைத்தளங்களில் நிலவும் எதிர்ப்பை புரிந்து கொள்ளவும்,. புரிந்து கொண்டு எதிர்வினையாற்றவும் வேண்டும்.

தொண்டர்கள் பெயரில் திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சதி?

தேர்தல் நெருங்க நெருங்க திமுகவுக்கு பொது மக்களிடம் உள்ள நன்மதிப்பை சிதைப்பதற்கான வேலைகள் துரிதமாக்கப்படுகிறது. விருகம்பாக்கம் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய யுவராஜ் இந்து மக்கள் கட்சியில் செயல்பட்டு வந்த ஒரு ரவுடி. இந்து மதம் சார்ந்த கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபடும் யுவராஜுக்கு அவர் வாழும் பகுதியிலேயே செல்வாக்கு இல்லை மக்கள் அவரைக் கண்டு கஞ்சி நடுங்குகிறார்கள். தன் காரில் திமுக கொடியோடு வலம் வரும் யுவராஜைப் பார்க்கும் போது மக்களுக்கு திமுக மீதும் அல்லவா அதிருப்தி வரும். இந்நிலையில் தான் யுவராஜ் கைதான உடன் யுவராஜை விட்டு விட்டு பரம்பரை திமுக எதிர்ப்பு ஸ்லீப்பர் செல்கள் உடனே திமுகவை திட்டத் துவங்குகிறார்கள். நூற்றுக்கணக்கான மீம்ஸ்களை போடுகிறார்கள். உதயசூரியன் சின்னத்திற்கு பதிலாக பிரியாணி போன்ற சின்னத்தை போடுகிறார்கள்.இந்த அத்தனை மீம்களும் எங்கிருந்து பிறக்கிறது என்பதை கண்டறிவது எளிது. அதற்கான வேலையை திமுகவின் ஐ.டி விங் செய்கிறதா?
திமுகவை வீழ்த்த முன்னர் எப்போதையும் விட எதிரிகள் பல சதிகளைச் செய்யும் நிலையில் திமுக தொண்டர்கள் பெயரில் இது போன்று பல தாக்குதல்கள், வன்முறைகள், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சமூக வலைத்தளங்களில் திமுக மீது பழி போடும் திட்டத்தோடு சிலர் செயல் படுவதாக தெரிகிறது. உடனடியாக திமுக மாவட்டச் செயலாளர்களை அழைத்து கீழ் மட்ட நிர்வாகிகளின் உதவியோடு தொண்டர்களுடன் நேரடி உரையாடலை நடத்தி திமுகவோடு உணர்வு பூர்வமான பிணைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
காரணம் திமுகவை வீழ்த்த பொய் பிரச்சாரங்களைச் செய்ய ஸ்லீப்பர் செல்கள் தயாராக இருக்கிறார்கள்.

#திமுகவை_வீழ்த்த_சதி #இணைய_ஸ்லீப்பர்செல்கள் #திமுக_செயல்தலைவர்

ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்!

நாற்காலியில் அமர்ந்தார் கருணாநிதி!

ரஜினியுடன் தன்னை பொருத்தமற்று ஒப்பிட வேண்டாம் : கமல்!

நியூட்ரினோ திட்டத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு உள்ளது-மத்திய அமைச்சர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*