திருமுருகன்காந்தி பெங்களூருவில் வைத்து கைது!

இறுதி ஊர்வலம் தொடங்கிவிட்டது-மனுஷ்ய புத்திரன்!

#kalaignar_karunanidhi_Updates தொலைதூரத்திலிருந்து ஒரு கடிதம்!

ஆதவன் மறைவதில்லை!

கலைஞர் கருணாநிதியின் கல்லறை வாசகம் இது!

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். தோழர் திருமுருகன் காந்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார். இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தி அவர்களை பெங்களூரில் கைது செய்யள்ளனர். பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த அடக்கு முறையினை வன்மையாக கண்டிப்போம். தூத்துக்குடி படுகொலையின் குற்றவாளிகளை சர்வதேச அளவில் அம்பலப்படுத்திய நம் தோழருக்கு நிகழ்த்தப்படும் அடக்குமுறைக்கு எதிராக இணைந்து குரலகழுப்புவோம் தமிழர்களே. – மே பதினேழு இயக்கம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*