திருமுருகன் மீது உஃபா :தெரியாமல் தேதி போட்ட போலீஸ்!

கலைஞர் கருணாநிதி:தலைவர்கள் உரை!

மெர்சலை மிஞ்சும் விஜய்யின் சர்கார்!

தமிழகத்தில்: கதற கதற ஆபரேஷன் செய்த துப்புரவு ஊழியர்!Video

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான திருமுருகன் காந்தியை கடுமையான உஃபா சட்டத்தின் கீழ் சிறை வைக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் ஐநா மனித உரிமை அமர்வில் பங்கேற்ற திருமுருகன் காந்தி அங்கு நடந்த அமர்வுகளில் பங்கேற்று தமிழகத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பேசினார்.பின்னர் நாடு திரும்பிய திருமுருகனை பெங்களூரில் வைத்து செய்து அவர் மீது வழக்கு மேல் வழக்குப் போட்டு சிறையில் தள்ளியது தமிழக அரசு. அவர் மீது புனையப்பட்ட வழக்குகளில் உஃபா எனப்படும் கடுமையான சட்டப்பிரிவும் ஒன்று.சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act) என்ற பிரிவின் கீழ் கைது செய்துள்ளார்கள். 2017-ல் நுங்கம்பாக்கத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பாலஸ்தீனம் போல ஒரு போராட்டம் இங்கும் நடக்கும் என்று அவர் கூறியதால். அப்படி தமிழகம் பாலஸ்தீனம் ஆகி விடாமல் தடுக்க அவரை காலவரையறையின்றி சிறையில் வைப்பதுதான் உஃபா சட்டம். இந்நிலையில், இன்று திருமுருகன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்

திருமுருகன் பேசியதாக போலீசார் வழக்குப் பதிந்துள்ள நாளில் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தார்.சிறையில் இருந்த ஒருவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாக பொய் வழக்கு புனைந்துள்ளார்கள்.மூன்று வருடங்களுக்கு முந்தைய வழக்குகளை எல்லாம் இப்போது போடுகிறார்கள் என்றும் வாதிட்டார்கள். வாதங்களைக் கேட்ட நீதிபதி “எந்த அடிப்படையில் திருமுருகன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தீர்கள், தவறான தேதியை குறிப்பிட்டு எப்படி வழக்குப் பதிய முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது போலீசார் ‘தெரியாமல் தவறான தேதியை குறிப்பிட்டு விட்டோம்” என்றனர். இதைக் கேட்ட நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர். பின்னர் உஃபா சட்டத்தின் கீழ் திருமுருகனை சிறையில் அடைக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், செப்டம்பர் 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் நீதிமன்றத்தில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
திருமுருகன் மீது புனையப்பட்ட வழக்குகள் 34 அதில் ஒன்று உஃபா ஆயுள் முழுக்க திருமுருகனை சிறையில் வைக்கும் நோக்கோடு புனையப்பட்டுள்ள இந்த வழக்குகளை திருமுருகனை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும் முயற்சி என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஸ்மாட் நகரம் அமைச்சர் வேலுமணியின் பினாமிக்கு டெண்டர்

தமிழ்த்தேசிய அரசியல் உக்கிரமாக காத்துக் கிடக்கிறது:ராஜ்தேவ்

‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்படம் பற்றிய பகிர்வுத் தொகுப்பு

#Relice_Thirumurugan #திருமுருகன்காந்தி #மே_17 #திருமுருகனை_விடுதலை_செய்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*