தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றம் :நீதிமன்றம் அதிரடி!

கருணாநிதிக்காக திரண்ட கூட்டம் பிரமித்துப் போனேன்:ரஜினிகாந்த்!

கலைஞர் சமாதியில் அழகிரி அஞ்சலி: திமுகவுக்குள் சலசலப்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராடினார்கள். இந்த போராட்டத்தின் நூறாவது நாளான மே-22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. பல்லாயிரம் பேர் திரண்ட இந்த போராட்டத்தில் தமிழக போலீசாரின் அணுகுமுறை கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. போலீஸ் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
போலீசாரின் இந்த துப்பாக்கிச் சூடு உலக அளவில் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் அடக்குமுறைகளை ஏவியதோடு, பல்வேறு கைதுகளை இது தொடர்பாக அரங்கேற்றிக் கொண்டே இருந்தது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் நடந்து வந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி செல்வம், பஷீர் ஆகியோர் விசாரித்து ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ததோடு. தூத்துக்குடியில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ க்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளது.

 

#Sterlite_shoot #ஸ்டெர்லைட்_கொலைகள் #தூத்துக்குடிதுப்பாக்கிச்சூடு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*